உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 179 காட்சி 59] மு. கருணாநி தி [சிறைச்சாலை மென் முத்தன் அடைப்பட்டிருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். காற்று வீசிக் கொண்டிருக்கிறது. அந்தக்காற் றின் ஸ்பரிசத்தை சில நாழிகைகளுக்கு பிறகு அவனால் உணரமுடியாது. சிறைக் கம்பிகளுக்கு வெளியேத் தெரியும் அந்த உலகத்தின் சிறிய பகுதியை காணும் அவனது மோகன விழிகள் கொஞ்சநேரத்தில் மூடிவிடும். அய்யோ! அதற் குள், ஒரு முறை அவன் இதயம் நிறைந்தவளை வார்க்கக் கொடுத்து வைக்காதா அந்த ஏழைக்கு! அதோ! முத்தாயி வந்து விட்டாள். உண்மை தான் ! நினைவின் நிழலல்ல! அவன் கண்ணில் தேங்கி நிற்கும் நீர் துளிகளுக்கிடையே வைடூரி யத்தின் நடுவே நிழலாட்டம் போடும் ஒளி போன்றதல்ல அந்த உருவம். உண்மையாகவே முத்தாயி வருகிறாள். அத்தான் என்றலற வாய் திறக்கிறாள். ஆனால் முடியவில்லை. நெஞ் சடைத்து விடுகிறது. முத்தன்: இன்பமே! கலங்காதே! இன்று நம் கு கடைசி நாள் ! கடைசி சந்திப்பு! காதல் பாடும் உன் கண்களை இனி நான் பார்க்க முடியாது! தேன் பொழியும் உன் அதரங்களின் தித்திப்பை இனி நான் சுவைக்க முடியாது! இன்னும் இரண்டொரு வினாடி கள். உன்னைப்பற்றி இன்ப நினைவுகளை அதற்கு மேல் இந்த ஏழை முத்தனால் சுமக்க முடியாது!