17 படை எண்ணெய் வளமேயாகும். அமெரிக்காவில் ஓர் ஆளுக்கு 3780 லீட்டர் வீதம் எண்ணெய் செலவு ஆவதும் இந்தியாவில் 15 லீட்டர் செலவு ஆவதும் குறிப்பிடத் தக்கது. மற்றோர் எரிபொருளாகிய இயற்கை 'காஸ்-ம்' இம் மாவட்டத்தில் கிடைக்கிறது. இது இருக்கும் இடம் சீர்காழி வட்டத்திலுள்ள (சீர்காழியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள) நெய்ப்பத்தூர் என்னும் இடமாகும். இதன் தன்மை, அளவு, பயன்படுத்தும் விதம் ஆகியவை பற்றித் தமிழ்நாடு அரசாங்கத்தின் கனிவளப்பகுதி ஆய்ந்து வருகிறது. பழுப்பு நிலக்கரி பழுப்பு நிலக்கரி இம்மாவட்டத்தில் கோடிக் கரை யிலிருந்து 30 கி. மீ. தொலைவிலுள்ள சில இடங்களில் 17 அடி (5 மீட்டர்) ஆழத்தில் 1828-இல் அகப்பட்டது. ஆனால் அதன் அளவு குறைவாகவும் வெட்டும் செலவு கூடு தலாகவும் இருந்ததால் இதை எடுக்கும் வேலை கைவிடப் பட்டது. இல்மனைட்டு தோரியம் ஜர்க்கான் தரமான எஃகு செய்வதற்கு உதவும் இல்மனைட் தரங்கம்பாடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் கடற்கரையில் கிடைக்கிறது. மீமிசல், அதிராம்பட்டினம், நாகப்பட் டினம் ஆகிய இடங்களிலும் கடற்கரையில் இல்மனைட் காணப்படுகிறது. அணு ஆற்றலுக்கு வேண்டும் தோரிய மணலும் கடலோரத்தில் சிறிதளவு கிடைக்கிறது. கொதி கலச் செங்கல் செய்வதற்குத் துணையாக உள்ளதும், பிளாஸ்டிக் தொழிலுக்குப் பயன்படுவதுமாகிய ஜர்க் கான் என்னும் கனிவளம் தரங்கம்பாடிக் கடற்கரை மண லில் 2 முதல் 5% இருக்கிறது.
பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/18
Appearance