உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தஞ்சாவூர் மாவட்டம் 1961.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பிரிட்டிஷ் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியில் தஞ்சை மாவட்டம் 150 ஆண்டுகள் இருந்தது. சோழர், நாயக்கர், மஹாராஷ்டிரர் காலங்களில் தனி அரசர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த. தஞ்சை அயல்நாட்டினரின் ஆட்சிக்குட்பட்ட ஒரு மாவட்டம் ஆயிற்று. ஆங்கிலக் கல்வி பெருகிற்று. படித் தவர்களும் செல்வர்களும் சென்னை நகர்க்குக் குடியேறி அங்கிருந்தவாறே கிராமங்களில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டி வந்தனர். கிறித்தவமும், ஓரளவுக்கு இஸ்லா மும் பரவின. இம்மாவட்த்தார் பலர் ஆங்கில அரசாங் கத்தினரிடம் உயர் பதவிகள் பெற்றனர். தொடக்கத்தில் பிரிட்டிஷார் திருவையாறு, கும்ப கோணம், மாயூரம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை என்னும் 5 இடங்களைத் தலைநகராகக் கொண்ட 'சுபா'க் கள் அமைத்து இம்மாவட்டத்தை ஆண்டனர். அப் போது, வடபகுதிக் கலக்டர் தென்பகுதிக் கலக்டர் என்று இரு கலக்டர்கள் இருந்தனர். 1800-இல் கடலூர் வரையுள்ள பகுதிக்கும் சேர்த்து ஒரே கலக்டர் நியமிக்கப் பட்டார். பிறகு, கடலூர் தென் ஆர்க்காட்டில் சேர்க்கப் பட்டது; 1809-இல் தஞ்சாவூருக்கும் திருச்சிச்கும் ஒரே கலக்டர் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் ஐம்பது ஆண்டுகள் நாகம் பட்டினமும் தரங்கம்பாடியும் தஞ்சை மாவட்டத்தின் தலைநகரங்களாக இருந்தன. அதன்பின்னரே தஞ்சா வூர்க்கு இச்சிறப்பு வழங்கப்பெற்றது. ஆங்கிலேயர் வருகையால் சென்னை ஒரு பெருநகரமாகிவிட்டதால், சென்னைக்குத் தெற்கேயுள்ள பெருநகரம் என்ற நிலையே தஞ்சைக்கு இருந்தது. விழுப்புரம் - திருச்சி குறுக்குப் பாதையில் இரயில் போக்குவரத்து ஏற்பட்டபிறகு திருச்சி பெருநகரமாயிற்று. தஞ்சையின் முக்கியத்துவம் மேலும்