உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 இரத்தக் கண்ணீர் குடிசையிலே முத்தன் காத்திருக்கிறான். ஒவ்வொரு நாளும் அவர்களுக்குப் புதிய நாள் தானே !- இருவரும் தழுவிக் கொள்கிறார்கள். முத்தன்: அப்பா -நீ ஒரு புதுமையான நெருப்பு. முத்தாயி: என்ன- நெருப்பா? முத்தன்: ஆமாம் உன்னை நீங்கினால் சுடுகிறது. நெருங்கி னால் குளிர்கிறது. முத்தாயி : சரிதான் வள்ளுவரே !... மூத்தன்: எதைப்பார்த்தாலும்

வருகிறது... உன் நினைப்புதான் முத்தாயி; அப்படியா? அது ஆபத்தாயிற்றே - முத்தன்: ஏன்? முத்தாயி: ஒரு கிழவியைப் பார்ப்பதாக கொள்ளுங்கள். முத்தன் : வைத்துக் அப்போதும் உன்னைத்தான் கற்பனை செய் வேன். கிழவியின் கூந்தலைப்போல வெள்ளை உள்ளம். அவள் முதுகின் கூனல்மாதிரி வளைந்த உன்புருவம். அவள் நடுங்கும் உடம்புமாதிரி... நடுங்கும் உன் தங்க உடம்பு. அவள் கையிலேயிருக்கும் ஊன்றுகோல் LOT ...... முத்தாயி: முத்தன் : முத்தாயி: என் அத்தான் ! நீங்கள்! என் கண்ணே ! உஸ் இது அடுக்களை ! முத்தன்: ஆணும் பெண்ணும் தனியே இருந்தால் அடுக்களை - அந்தப்புரம் எல்லாம் ஒன்றுதான். இருவரும் இன்பகீதம் இசைக்கிறார்கள். இரவு அவர்களை வாழ்த்துகிறது.