________________
நம்பிக்கை வெற்றி பெறக் கழகம் இடைவிடாது தொண் டாற்றி மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைப் பெற்று சுயாட்சித் தன்மையுடன் விளங்க முடியும் என்று உறுதி யுடனும் - கழகம் தனது பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டது. அந்த முடிவை விளக்கி, அண்ணா அவர்கள் நீண்டதோர் அறிக்கை விடுத்தார்கள். பதினேழு ஆண்டுகாலம் பிரதமராக இருந்த பண்டித நேரு மறைந்தார். மூட நம்பிக்கைகள், சடங்குகள் சாத்திரங்களை வெறுத்த-பழுத்த பகுத்தறிவுவாதியாக நேரு இருந்தார் என்பதை அவர் எழுதி வைத்துள்ள "உயில்" பேசுகிறது. தன்னுடைய மூச்சற்ற உடலுக்கு எந்தவிதமான மதச் சடங்குகளும் இணைந்த ஈமக் கடன் கள் ஆற்றக்கூடாதென்று அந்த உயிலில் அவர் கண்டிப் பாகக் குறிப்பிட்டிருந்தார். பகுத்தறிவுவாதியாக, ஜனநாயகவாதியாக, ஓய்வில் லாது உழைக்கும் தலைவராக இருந்த நேருவுக்குப் பிறகு, பிரதமர் யார்? இந்தக் கேள்விக்கும் உடனடியாக விடை கண்டது தமிழ்நாடுதான்! ஆம், தியாகச்சுடர் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான காமராசர், அப்போது அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர். அவர்தான் பிரதமரைத் தேர்ந்தெடுத் தார். அவரது கருத்துக்கேற்ப லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். சாஸ்திரியின் ஆட்சிக் காலம் மிகக் குறுகியதுதான். அந்தக்காலக் கட்டத்தின் 1964-65ஆம் ஆண்டுகளில் இந்தி யைத் திணிக்கும் முயற்சி மீண்டும் தலையெடுத்த காரணத் தால் தமிழ்நாடு எரிமலையாக மாறிற்று. மொழிப்புரட்சி மூண்டது. உலகத்திலேயே தாய்மொழியைக் காப் பாற்றுவதற்காக ஆசிரியர், மாணவர், தொண்டர்கள்