________________
• 25 அதற்கான சூழ்ச்சி வலைகளைப் பின்னிடத் தொடங்கினர். அந்த வலை வீசும் வேலையில் காலஞ் சென்ற மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் மத்திய அரசுக்குப் பெரும் உதவி புரிந்தார். எம். ஜி. ஆர் டெல்லி வட்டாரத் தினரால் மிரட்டப்பட்டார். அதன் காரணமாக அவர் கழகக் கட்டுப்பாடுகளை மீறிப் பொது கூட்டங்களில் மனம் போன போக்கில் பேசினார். திட்டமிட்டே அவ்வாறு பேசினார்! தான் கட்சியி லிருந்து நீக்கப்பட வேண்டுமென்று விரும்பினார். இல்லை யேல், டெல்லியின் கிடுக்கிப் பிடியிலிருந்து அவரால் தப்ப முடியாது. கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுப் புதிய கட்சி யைத் தொடங்கி, சினிமாக் கவர்ச்சி ஒன்றை மட்டுமே தனது அரசியலாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்புக்கும் வந்துவிட்ட அவர், தி.மு.க ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் கையாளாக இருந்து கழகத்தின் கொள்கை களை எதிர்த்தார். அண்ணா வகுத்த கொள்கைகளுக்கு மாறாகச் செயல்பட்டார். கழக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் அவரைக் கொண்டே அவதூறுக் குற்றச்சாட்டுகளைத் தரச் சொல்லி, அவற்றை டெல்லி வாங்கி வைத்துக் கொண்டு, அவைகளைக் காட்டி மிரட்டியே, தி. மு. க.வையும், தி மு. க அரசையும், அதன் கொள்கை குறிக்கோள்களுக்கு மாறாகத் தங்களுக்கு அடி பணிய வைத்துவிடலாம் என்று இந்திரா அரசு கனவு கண்டது. கழகத்தின் எழுச்சி முரசம் கழகம் அஞ்சிடவில்லை. "உறவுக்குக் கை கொடுப் போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்" என்பது தி.மு.க. வின் எழுச்சி முரசமாயிற்று.