உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்தியா சுதந்திரம் பெற்று இருபத்தைந்தாண்டுக் காலமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 விடுதலை நாள் விழாவில் மாநிலங்களில் கவர்னர்தான் தேசியக்கொடியை ஏற்றுவது என்ற நிலை இருந்தது. மக்களால் களுக்கு அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் உரிமை வேண்டுமென்று கழக அரசின் தமிழ்நாடுதான் சார்பாக வாதாடி, ஆகஸ்டு 15-ஆம் நாள் தேசீயக் கொடி ஏற்றும் உரிமையை முதன் முதலாகத் பெற்றது. இந்திய தேசீயக் கொடியுடன், மாநிலங்களுக்கான தனிக் கொடிகள், தேசீயச் சின்னத்துடன் இருக்கலாம் என்ற கருத்தையும், கழக அரசு, மத்திய அரசிடம் வலி யுறுத்தியது. இந்தக் கோரிக்கைகள், இந்திரா அரசுக்கு, தி.மு. கழகத்தின் மீது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கக் காரணமாக அமைந்தன. மத்திய மாநில உறவில் கீறல் அதனால், அவர்கள் 1969-60 தி.மு.க. செய்த உ உதவியை மறந்தனர். 1971 தேர்தலில் தி. மு. க. உதவி யுடன் தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற முடிந்தது என்பதையும் மறந்தனர். மத்திய மாநில உறவுகளில் கீறல் விழத் தொடங் கியது. பங்களாதேஷ் போரின்போது யுத்த நிதியாக ஆறு கோடி ரூபாய் திரட்டி இந்திராவை அழைத்து அவரிடம் வழங்கியதும் தமிழ்நாட்டில் தி. மு. க. அரசுதான்.