உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

212 கருணாநிதி தமிழகத்து மண்ணிலே குருதி! விண்ணிலே புழுதி ! புண்ணிலே வேல் பாய்ந்தது போன்ற நிகழ்ச்சிகள் ! கண் ணிலே புனலும், பண்ணிலே கனலும் எழும்ப திராவிடம் தனது எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளத் தயா ராகிவிட்டது. தர்பார் சூரர்களோ தருக்குமிக்க துரைத் தனத்தால் உருக்குலைத்துவிடலாம் இந்த உணர்ச்சியை என்று உறுமிப் புறப்பட்டுவிட்டனர். வளர்ந்து து ay வரும் எழுச்சியால்,தங்கள், வயிறு வளர்க்கப் பயன்பட்டுவரும் கட்சிகள் தேய்ந்து விடுமோ என்று அஞ்சியவர்கள் நேரம்பார்த்து நஞ்சுமொழி பேசக் கிளம்பிவிட்டனர். தீரமிக்கத் திராவிடப் படையினர் ஐயாயிரவர் அகப்பட் டனர் சிறையில் - ஆகவே இதுதான் சமயம் - காற்றுள்ள போதே தூற்றிக்கொள் - என்ற பழமொழிக் கிணங்க மூடிக்கிடந்த முக்காடுகளை விலக்கிவிட்டு லையில் கிடந்த ஓட்டை உடைசல்கள் முரசு தட்ட எழுந்து விட்டன. "ரத்தம் ரத்தம்! பலாத்காரமே நமது லட்சியம் 2” என்று வெறிபிடித்தலைந்த நரிக்கும்பல்கள் மக்கல் மன்றத்திலே தலைநீட்டி - ஆட்டுமந்தைக்கு நாட் டாண்மை உத்தியோகம் கேட்க நாக்கைத் தீட்டிக் கொண்டன. சரித்திரத்திலே மட்டுந்தான் இவர்களுக்கு இடம் இருக்கவேண்டும். இவர்களுடைய கணக்கைத் தீர்த்துக் கட்டியாக வேண்டும் என்று காகபட்டரின் பரம்பரைத் தோன்றல் கச்சைகட்டி கிளம்பிவிட்டது. அக்கிரகாரத்தின் குரல்களாம் ஆரிய ஏடுகள் - தங்களின் விஷமப் பிரச்சாரத் தொனியை உச்சஸ்தாயில் உயர்த் திக்கத்தின. பயந்துபோன பண்டிதர்கள் சிலர் திரா விடர் என்பதே கற்பனையென்று கூறி போலி வாதத்திற்கு திரைபோட முடியாமல் மழுப்பியும் - வழுக் கியும் - மறைந்து திரிந்தனர். இந்தச் சிறு சந்தடிகளுக்