உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 கருணாநிதி துளைத்தெடுத்தன. "என்ன சார் விஷயம் ” எனறு அவ ருக்கே இயல்பான துடிப்பு நிறைந்த சொற்களால் சுன் னைக் கேட்டார். கேட்டார். கேட்டுக்கொண்டேயிருந்தார். பிறகு அவரே, காரணத்தை எனக்கு விளக்கிடும் அளவுக் குத் தெளிவும் பெற்றார். அவளது சிவந்த கரங்களிலே சில கடிதங்கள் இருந்தன. நான் கடிதமென்று சொல் கிறேன்; அதை அவள் பொற்சுரங்கமென்டாளோ; புதை யல் எடுத்த தனமென்பாளோ நானறியேன். ஏனெனில், அவைகள் அவள் காதலனின் கடிதங்கள். எங்கேயோ தூரத்திலிருந்திருக்கவேண்டும் அந்தத் துடியிடையாளைத் துணைவியாகப் பெற்றிடத் துடித்தவன். அவன் தான் இப் போது அவளிடம் அந்தப் பழைய ஓலைகளின் மூலம் பேசிக்கொண்டிருக்கிறான். நினைவு - எத்துணை இன்பமான வேதனை அளிக்கக் கூடியது. அதற்கு அவள்மட்டும் விதி விலக்கா? அவள் கையிலே பழைய கடிதங்கள். நெஞ்சிலே புதிய புயல்கள். அதுபோலத்தான் - எங்கள் நினைவிலே தமிழரின் பழைய வரலாறுகள். லைமையோ பூகம்பம் எரிமலை பிரளயம்! மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே! என்ற விதத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கும் காதல னின் கடிதத்தில்! பொன்னும் முத்தும், பொதிகைச் சந்தனமும், எகிப் துக்கும், ஏதென்சுக்கும் ஏற்றிச்செல்லப்பட்டன என்ற கதையைச் சொல்லும், கடிதமாகக்கூட ஆகும் பாக்யம் பெறாத தமிழர் முன்னாள் பெருமை.