உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7 இந்த மாவட்டத்தினுடைய கழகத்தின் செயலாள ராகவும் இருந்தவர் அவர். அமைதியின் உருவம், ஆர்ப் பாட்டம் இல்லாமல் கழகத்தை நடத்துகின்ற பண்பாளர். அந்த மறைந்த மாவீரனுடைய பெயரால்தான் இந்தத் திடல் "குன்றத்தூர் சம்பந்தம் திடல்" என்று நம்மால் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. பந்தலுக்கு இட்டிருக்கின்ற பெயர் ஒரு பகுத்தறிவுச் சிங்கத்தின் பெயர்! பேரறிஞர் அண்ணா அவர்கள் கம்பன் இராவணனை 'இரக்கமிலா அரக்கன்' என்று எழுதிய ஒரு சொற் றொடரை மறுப்பதற்காக ஒரு நாடகமே எழுதினார். 'இரக்கமிலா அரக்கன்' என்று இராவணனை கம்பன் விமர்சித்தது தவறு என்பதை எடுத்துக் காட்ட அண்ணா தீட்டிய நாடகத்திற்கு அவர் இட்ட பெயர் 'நீதிதேவன் மயக்கம்.' இராவணன் நீதிதேவனுக்கு முன்னால் வந்து வாதாடு வான். இராவணன் உருவத்திலே-அந்தப் பாத்திரம் தாங்கி அண்ணா நிற்பார். கம்பன் வேடத்திலே நண்பர் சி.வி எம். அண்ணாமலை நடிப்பார். கம்பனும் இராவணனும் வாதாடுவதைக் கேட்டுக் கேட்டு என்ன தீர்ப்பளிப்பது என்று புரியாது தயங்கிய நிலையில் இராவணனுடைய வாதங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த வாதத்தை வைத்து தீர்ப்பு எழுதினால் இராவணனுக்கு சாதகமாகத் தானே தீர்ப்பு எழுத வேண்டும். "நீ அரக்கனல்ல. நீதமிழன்.ஆனால் கம்பர் உன்னை அரக்கன் எனக் குறிப் பிட்டார்" என்று தானே தீர்ப்பு எழுத வேண்டும் என்ற சங்கடத்திற்கு ஆளாகி நீதிதேவன் எந்தத் தீர்ப்பும் வழங் காமல் மயங்கி விழுந்து விடுவான். அந்த நீதிதேவனாக