உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 கருணாநிதி டால்மியபுரம் போராட்டம்- புதுக்கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டம் ரயில் நிறுத்தப் போராட்டம் முதலியவற்றை தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெறத் துவங்கியது. அந்த வழக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலை வர்களில் தண்டிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்றாலுங்கூட - பெரிதும் நமக்கு பயன்பட்ட வழக் காகவே இருந்தது. நம்மைப்பற்றிய முழுவிபரங்களை பொதுமக்களும் - மாற்றுக்கட்சிகளும் புரிந்துகொள்ளக் கூடிய விதத்திலே வழக்கு அமைந்தது. லட்சத்துக்கு மேற்பட்ட உறுபினர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதும் - கட்டுப்பாடு - கண்யம் - அமைதி - முதலியவை தி. மு. க. வின் லட்சியம் என்பதும் - ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளையுடைய பெரும் இயக்கம் என்பதும் - தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக நிற்கும் மாபெரும் தேசீயக் கட்சி திராவிட முன் னேற்றக் கழகம் ஒன்றுதான் என்பதும் - அரசாங்கத் தைச் சேர்ந்த அதிகாரிகளின் சாட்சியங்களின் வாயிலா கவே நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்ட.து. . ஐவர்மீது தொடரப்பட்ட வழக்கு இத்தகைய கணிச மான புள்ளி விபரத்தை மக்கள் மன்றத்திற்குத் தந்திட உதவியது. நீதி மன்றத்திலே ஐவரும் தந்த வாக்குமூலங்கள் நமது கழகக் கோட்பாடுகளை நாட்டுக்கு அறிவிக்கும் முரசங்களாக அமைந்தன.