உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 கருணாநிதி ஜூன் 19 1946ம் ஆண்டில் பெரியதோர் சதிவழக்கில் நமது இயக்க நண்பர்கள் சிக்க வைக்கப்பட்டு சிறையிலே கிடத் தப்பட்டனர். அவர்களை மீட்டிட வழக்கு நடத்துவதற் காக அறிஞர் அண்ணா அவர்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். அப்போதெல்லாம் நாம் திராவிடர் கழக மாக இருந்தோம். அந்த வழக்கிற்கு துணை புரிய திரா விடர் கழகத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லா விட்டாலும்கூட அண்ணாவும் மற்றும் சிலரும் தனியாக முயற்சி யெடுத்து திருச்சியிலே 'நீதிதேவன் மயக்கம்? நாடகத்தை நடத்தி -தானே நடித்து ஐ ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் அந்த வழக்கின் நிதிக்காக அளித்தார். அய்யா - அண்ணா தகராறு என்று அப்போது பேசுவார் களே - அந்த தகராறுக்கு இந்த வழக்கு ஒரு காரணம். இத்தகைய பிரசித்தி பெற்ற வழக்கிற்குத்தான் கரூர் கலவர வழக்கு என்று பெயர். க்க "" எங்கள் அந்தக் கரூரிலே ஜூன் 19ல் “டால்மியாபுர விளக் கூட்டம் " ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழுவும் கரூர் வந்து சேர்ந்தது. அன்றையதினம் எங்களு டன் இன்னொருவர் வந்து சேர்ந்து கெ கொண்டார். நமது மாநாடுகளிலும், பொதுக்கூட்டங்களிலும், இ சை நிகழ்ச்சி களிலும் இருவர் பெயர் அடிபடுமல்லவா - இசை முரசு அனிபா - இன்னிசைச் செல்வர் செல்லமுத்து. இருவரில் ஒருவரான செல்லமுத்து அன்று முதல் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கூட்டத் துவக்கத்திலும் சரி - எங்கள் பிரயாணத்தின்போதும் சரி - சங்கீதத் தென் றல் வீசி வந்தார். சுற்றுப்பயணங்களின் போது செல்ல முத்து கூட இருந்தால் சுவைக்கும் குறைவில்லை - சுறு ,