உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 39 தொழிற் கல்வி முறைதான் சிறந்தது எனக் கொள் அவ்வழியிலே மேல் நாடுகள் சென்று ளப்பட்டு மேன்மையுறுகின்றன: ஆளும் வர்க்கம் வாணிபம் முதலிய - பாதுகாக்கும் வர்க்கம் - தொழில்' வர்க்கம் - என்று அரசியலிலே மூன்று முக்கியமான -உன்னதமான பிரிவுகளைப் பிரித் துக் காட்டி, பிறப்பின் காரணமாக இல்லாமல் சிறப் பின் காரணமாக அந்தந்த வர்க்கத்தில் இடம்பெற எந்த னிதனுக்கும் உரிமையுண்டு என்பதையும் எடுத்துக் காட்டி - அத்தகைய மூன்று பிரிவிற்கும் L தேவையான கல்வியை அவர்களுக்கு இளமையில் போதிக்க வேண்டு மென்றும் - யார் எந்தப் பிரிவு கல்வியை விரும்புகிறார்கள் என்று பார்த்து அந்தத் துறைக் கல்வியை அவர்கட்கு வழங்க வேண்டுமென் . றும் உலகக் கல்வித் திட்டத்திற்குக் கை ககாட்டியாக இருந்த பேரறிஞன் பிளேட்டோ எழுதி வைத்திருக்கிறான். ஆனால் ஆச்சாரியாரின் மூளையிலே ஐம்பது வருட கால மாக ஊறிவந்த திட்டத்தை நிறைவேற்ற இப்போதுதான் சமயம் வாய்த்தது என சந்தோஷப்படுகிறார். அவனவன் குலத்தொழிலை அவனவன் செய்யவேண்டுமென்று திரா விட நாட்டிலே ஒரு கல்வித் திட்டத்தின் மூலம் சொன்னால் அந்தத் திட்டத்திற்கு வர்ணாஸ்ரமத் திட்டம் என்ற பெய ரைத் தவிர வேறு பெயர் அளிக்க முடியாது. ஏனெ னில் பிராமண - க்ஷத்ரிய - வை ஸ் ய சூத்ர என்ற பிறப்பின் காரணமாக எழுந்த பிரிவுகள் ஒரு பெரிய சமுதாயத்தின் நடுவிலே எழுந்த வெடிமருந்துச் சாலை யாகி விட்டன. அந்த வெடிமருந்துச் சாலைக்கு தீ வைத். தால் பெரியதோர் பயங்கர விபத்து ஏற்படும் என எண்ணித்தான் - வெள்ளத்தால் வெடி மருந்தை ஈர