உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 41 காதீர்கள்" என்ற கருத்தை பிளேட்டோ வலியுறுத்திச் சொல்கிறான். ஆனால் இங்கிருப்பவர்களோ மூன்று மணி நேரமும் மும்மூர்த்தி லீலைகளைப்பற்றி சிறுவர்களுக்குப் போதித்துவிட்டு - கற்ற பாடங்களை கண்ணன் காட்டிய வழியில் செய்து காட்டிட சிறுவர்களுக்கு மீதி நேரத் தையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். 3 மணி நேரப் படிப்பை குழந்தைகள் கொண்டாட்ட முடன் வரவேற்கிறார்கள் என்று ஆதாரம் தேடுகிறார்கள் ஆச்சாரியார் பக்தர்கள். இரண்டுதார திருமணம் வேண் டுமா என்று ஸ்திரீலோலனைக் கேட்டால் என்ன சொல்லு வான்? குடிகாரனிடம் மதுவிலக்குபற்றி அபிப்பிராயம் கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? குழந்தைகட்கு என்ன தெரியும் எதிர்காலம்? கவலைப் படவேண்டியவர்கள் நாமல்லவா? இப்புதிய திட்டத்தால் பூத்துவரும் புதிய சமுதாயம் பொட்டல் காடா ாகிவிடும் என்று நாடு எச்சரித்தது நல்லோர் எச்சரித்தனர்- திட்டம் தருவோரின் கட்சித் தலைவர்களே எதிர்த்தனர் - ஏன்; பின்னர், "நிறுத்தி வைத்திடுக” என்று சட்ட சபையே தீர்ப்புக் கூறியது - எதையும் கேட்கும் எண்ணம் வர்ணாஸ்ரமத்தின் வாரிசுக்கு இல்லை. 66 ஆகவே ஜூன் மாதம் 21ம் நாள், நாடு முழுதும் தி.மு.கழகத்தினரால் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது; ட்டுமிராண்டிக் கல்வித் திட்டத்தை எதிர்த்து! காட அந்த நாளிலே தான் திருச்சியிலேயுள்ள மதுரை ரோடு தி.மு. கழகத்தின் திறப்பு விழாவை நடத்திவைக் கச் சென்றிருந்தோம். அன்று காலை தோழர் கண்ணதாச