உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 கருணாநிதி சம்,உற்சாகம். அய்யகோ! அவமானம்! அவமானம்! எனக் கதறியழுத ஜுலை 15! உடனே புறப்படு - உறைவிட் x டெழும் வாளெனவே புறப்படு - புலியே! புயலே! எழுந்திரு! நிலைகண்டு விண்மீன் நிலவு சிரிக்கிறது நினது கண் சிமிட்டிப் பரிகசிக்கிறது; சிங்கத் திருவிடத்தில் சிமண்டு முதலாளியின் பெயரா என்று கேட்டு! ஆனால் இதோ-கடல் குமுறுகிறது - உனக்கும் அழைப்பு மடல் விடுகிறது - புறப்படு - புறப்படு - என்று ஒலி கிளப்பிய ஜூலை 15! அந்த ஜூலை 15 பற்றிய கடைசிக்கூட்டம் ஜூலை 14ல் லால்குடியில் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன் லால்குடியிலே தான் டால்மியாபுரம் பற்றிய தீர்மானம் நிறைவேறியது - அதற்குப் பிறகு நடந்தவை என்ன - என்பதை விவரித்து போர்முரசு கொட்டிய கூட்டமும் அதே லால்குடியிலேதான் நடத்தப்பட்டது. அந்த லால் குடிதான் கல்லக்குடி களத்திலே பிணமாகப்போன நட ராசனைப் பெற்றெடுத்து பெருமையடைந்த பூமி. பொதுக் கூட்டத்திற்கு தோழர் பழனியாண்டி M.L.A.,அவர்கள் தலைமை தாங்கினார். அவர் டால்மியா தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் அன்பு கொண்டவர். டால்மியாபுரப் போராட்டம் எவ்வளவு அவசியமானது என்பதை அவர் விளக்கினார். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே நண் ப கண்ணதாசனும் காரைக் க்குடி தோழர் ராமசுப்பையா வும் மேடைக்கு வந்தார்கள். கண்ண தாசனும் கூட்டத் தில் பேசினார். போரில் கலந்துகொள்வதற்காகவே தானும் ராமசுப்பையாவும் வந்திருப்பதாகக் கூறினார்.