உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 / கலைஞர் கடிதம் நீ விளைத்த பயிர் வளர்ந்தோங்கும் காட்சியினைப் பார்த்தவாறு நிற்கிறாய். நீ இறைத்த ரத்தம், வாய்க்கால் வழியோடி இந்த இலட்சியப் பயிர் பூங்கதிர் விட்டுக் குலுங்கி நிற்கிறது. பூச்சிகள் விழாமல் மருந்து தெளிப்பதிலேயிருந்து- மாடுகள் மேயாமல் காவலிருப்பதிலேயிருந்து—எல்லாமே உன் வேலைதான்! அந்த வேலைக்கு அச்சாணி; மக்கள் பணி-உன் கழகம் ஏழை எளிய நடுத்தர மக்களின் இயக்கம்-செட்டிநாட் டரசர் உன்னைப் பார்த்து சிரித்து மகிழ்வார். ஆனால் மாளிகைக்குத் அவர் 'செக்' போகும் திக்கு-காங்கிரஸ் தான்! அது உனக்குத் தேவையில்லாததுங்கூட! "வாக்கு எண்ணிய பிறகே-எத்தனை இடம் என்று சொல்லமுடியும்' என்று முதல் நாள் சொன்ன சுப்பிரமணியம்; முடிவு தெரிந்த பிறகு “நான் அப்போதே நினைத்தேன், ஐம்பது இடம் வருமென்று” என தீர்க்கதரிசி வேடம் போடுகிறார். 120ல் ஐம்பத்திரெண்டை வென்றவர்கள் "வெற்றி வெற்றி!' என்று குதிக்கிறார்கள். அவர்கள் கணக்கில் அது பெரும்பான்மை! ஆரம்பத்தில் எவ்வளவு பலகீனமாகத் தங்களைப்பற்றி எண்ணியிருந்தால் 52 கிடைத்ததும் இப்படி மகிழ்வார்கள் என்பதை நினைத்துப்பார்! அவர்கள் தங்களைப் பலகீனமாக நினைத்து எதிர்பார்த் ததைவிட அதிகம் பெற்றார்கள். நாம் முயலைப் போல் கொஞ்சம் தூங்கிவிட்டோம்- நல்லவேளை; ஆமை நம்மைத் தாண்டிப் போவதற்குள் விழித்துக்துகொண்டோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/46&oldid=1691861" இலிருந்து மீள்விக்கப்பட்டது