உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவி கெடுத்தானே; பலே சாப்பாட்டை! அன்புள்ள சுப்பிரமணியம் அவர்களுக்கு தொண்டை மண்டல முதலியார் ஒருவர் பழுத்த சைவர்-பால் சாப்பிடுவது கூட மாமிசம் சாப்பிடுகிற பாபத்திற்குச் சமம் என்று அழுத்தமாகக் கூறிக் கொண்டி ருந்தவர். ஒரு முறை அவருக்கு ஏதோ வியாதி வந்த போது ‘ஈரல் கலந்த டானிக்' ஒன்றை அவசியம் சாப்பிட்டாக வேண்டுமென்று டாக்டர் வற்புறுத்திச்சொன்னார். டானிக் கில் தொடங்கி பிறகு முட்டை மாத்திரம் தான் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு-இறுதியாக இறைச்சி இல்லா விட்டால் இன்றைக்கு சாப்பாடு இறங்காது என்ற நிலை யில் வீட்டாரும் உறவினரும் அறியாத வகையில் பிரியாணிப் பிரியர்- கோழிப் பைத்தியம்- ஆட்டுக் கால் விசுவாசி- ஆராமீன் அன்பர்- ய என்றெல்லாம் பட்டங்களைப் பெற்று புலால் விடுதிக ளுக்கு நிரந்தரப் போக்குவரத்தாளர் ஆகிவிட்டார். இந்த ரகசியம் அவருடன் பழகும் மிக நெருங்கிய நண்பர்கள் இரண்டொருவருக்குத் தான் தெரியும். அந்த நண்பர் களில் ஒருவன் பெயர் தந்திரி; அந்தத் தந்திரி நல்ல விளை யாட்டு வீரன். வெளி நாடு சென்று அவனும் அவன் விளை யாட்டுக் குழுவினரும் பத்து போட்டியில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காகவும்; அதுவும் "ரன்னர்" கோப்பை எடுத்து வந்ததற்காகவும் பாராட்டு விருந்தொன்று ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/54&oldid=1691869" இலிருந்து மீள்விக்கப்பட்டது