உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அந்த உணவு அமைச்சர்? அன்பு நண்ப, உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் அதைத் தி.மு.க. ஆட்சியின் மீது தூக்கிப் போட்டுக் கும்மாளம் அடிப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார் கள் காங்கிரசார்! காங்கிரஸ் கட்சியின் ஏடுகள் அந்த வேலையைத் திறம்படச் செய்து வருகின்றன. “கணவன் மனைவி தகராறு” என்று செய்திக்குத் தலைப்பிட்டு; கணவன் தி. மு. கழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது என்பதாக ஒரு பொய்ச் செய்தி! 66 சினிமாக் கொட்டகையில் டிக்கட் வாங்கும்போது நெரிசலில் சிக்கி ஒருவர் சாவு! அதற்கு அந்தப் பட த்தில் நடித்த தி.மு.க. நடிகரே காரணம்.' இப்படியொரு கண்டுபிடிப்பு! “தி. மு. க.ஆட்சியில் வங்காளத்தில் ஒரு ரயில் கவிழ்ந்தது." "தி. மு. க. ஆட்சியில் ‘ஆல்ப்ஸ்' மலையில் ஒரு விமானம் மோதி நொறுங்கியது." தி. மு.க. வேட்பாளர் ஹம்ப்ரியை, நிக்சன் வெற்றி கண்டார்! வெற்றி! வெற்றி!!" இன்னும் இது போன்ற செய்திகள்தான் அவர்களது பத்திரிகையில் வரவில்லை. விரைவில் இந்த ரகச் செய்தி களையும் எதிர்பார்க்கலாம். தனியார் பஸ் ஒன்று; நாமக்கல்லில் கவிழ்ந்ததை வைத்துக் கொண்டு “தி.மு.க.ஆட்சியில் பஸ் கவிழ்ந்தது"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_1.pdf/81&oldid=1691896" இலிருந்து மீள்விக்கப்பட்டது