உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“தமிழ்த்தாயே அவர்களை மன்னித்துவிடு!” அன்பு நண்ப, ஆருயிர்த் தோழ, வெட்டிவா என்றுரைத்தால் கட்டி வரும் வீரா! அருமை அண்ணனுக்குத் தம்பீ! பெருமை மிகு கண்மணியே! உன்னைத்தான் அழைக்கின்றேன்; உனது ஒளிமிகு விழிகளைப் பூரிப்போடு பார்த்தவாறுதான் அழைக்கின் றேன்; விம்மிப் புடைத்த உன்தோளைத் தட்டித்தான் அழைக்கின்றேன்; இடையிலிருப்பது நாலைந்து நாட்கள் தான்! டிசம்பர் முதல் தேதி-நமது எண்ணமெலாம் இனிக் கும் நாள். எழுச்சி பொங்கும் நாள்.இதயம் பூரிக்கும் நாள் "என்னப்பா! ஊரெல்லாம் தெருவெல்லாம் கோயில் திரு தோரணம் விழாவா? கட்டுகிறார்கள்? என்று கேட்கும் மழலையை முத்தமிட்டவாறு; "திருவிழாதானடா என் கண்ணே! திகைத் துக்கிடந்த சமுதாயத்தை விழிக்க வைத்த பேரறிஞன் சாதனைகளில்ஒன்றைப் பாராட்டு கின்ற திருவிழாதானடா என் கண்ணே'