உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்றிட வேறு யாருளர்? அண்ணா, வண்ண வண்ணக் கொடிகள் வான்முட்டப் பறந்திட, வாழ்த்தொலிகளும் அதற்கு மறுப்பு முழக்கங்களும் செவிப் பறை கிழித்திட, வீதிக்கு வீதி, தெருவுக்குத் தெரு ஒலி பெருக்கிகள் கர்ச்சித்திட வந்து விட்டது தேர்தல்! என இந்திய மண்ணில் பல மாநிலங்களில் நாடாளுமன்றத் திற்கு மட்டுமே தேர்தல்-இங்கு நம் தமிழகத்திலோ சட்ட மன்றத்திற்கும் தேர்தல். “என்ன சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தி விடலாமா? மக்களை ஆண்டுதோறும் தேர்தல் தேர்தல் என்று அலைக்கழிக்க வேண்டுமா?" நிலைமையை விளக்கிடவும், கருத்துக்களைப் பெற்றிடவும் செயற்குழுவையும் பொதுக்குழுவையும் கூட்டியபோது, அதில் சிறப்பு அழைப்பினராகக் கலந்து கலந்து கொண்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் இம்மியளவு எதிர்ப்பும் காட்டாமல்; 'ஆம்; அதுவே உகந்த வழி”யென்று று எடுத்துக் கூறிய பாங்கினைக் கண்டபோது என் உள்ளமெம்லாம் சிலிர்த்தது. -66 - 13 1967--ம் ஆண்டு; உன் தலைமையில் பொதுத் தேர்தல் களம்புகுந்தது கழகம்! இப்போது நினைத்தாலும் என் நெஞ்சு நெகிழ்கிறது கண்கள் குளமாகின்றன விருகம்பாக்கத் தில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் கழக வேட் யாளர்களின் பட்டியலைப் படித்துக் கொண்டு வந்த நீ; சைதாப்பேட்டை தொகுதி என்று கூறி, சிறிது நிறுத்தி உனக்கேயுரிய அந்த நளினமான குரலில் 'பதினோரு லட்சம்' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_2.pdf/19&oldid=1691996" இலிருந்து மீள்விக்கப்பட்டது