உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 97 கண்ணொளி பெறுகின்ற ஏழை-மறுவாழ்வு பெறுகின் தாழுநோய்ப் பிச்சைக்காரன் - மாடிவீட்டில் குடியேறும் குடிசைவாசி-மனைப்பட்டா, நிலப்பட்டா லட்சக்கணக்கில் பெறுகின்ற கிராமவாசி - எங்கணும் மின்னொளி தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் - நல்வாழ்வு - விரிக்கிற் பெருகும் கல்லறையில் தூங்குகின்ற அண்ணன் கால்மலரில் வைக்கின்ற காணிக்கைகளன்றோ இந்த சாதனைகள்! - பீறிட்டுக் கிளம்பிய இருதயத்து ரத்தமெல்லாம் வீறிட்டு அலறிய நம் விழி வழியே கண்ணீராக வழிந்த நாளன்றோ; பிப்ரவரி மூன்றாம் நாள்! காணக்கிடைக்காத தங்கத்தை கடற்கரை மண்ணுக் குள்ளே புதைத்த நாளன்றோ; அந்த நாள்! கலங்கக் அண்ணனின் நினைவு நாள். ஆண்டு தோறும் கண் கொண்டாடுகிறோம். கொண்டாட்டமா அது? குமுறும் நெஞ்சங்கள்! புலம்பும் வாய்கள்! நீர் வழியும் கண்கள்! அனைத்தையும் அடக்கிக் கொண்டு அண்ணன் கூறிய "எதையும் தாங்கும் இதய'த்துடன் அமைதி ஊர்வலம் நடத்துகிறோம். அண்ணன் மறைந்த ஆண்டு, தலைமைக் கழகத்தின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீயும் மற்ற உடன்பிறப்புக்களும் ஊரெல்லாம் அந்த உத்தமனுக்குச் சிலைகளை எழுப்பியிருக்கிறீர்கள். ஒவ்வொரு ஊரிலும் இந்த ஆண்டும் மௌன ஊர்வலங் கள் நடைபெற்று அண்ணன் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணக்கம் செய்து; "எங்கள் தலைவனே! உன் வழி நின்று உன் கொள்கைகளையும், நீ உருவாக்கிய கழகத்தை கொடியினையும் யும், நீ எமது கையில் காப்போம்" தந்த என்று சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டும்.