உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

அருவிகள் என்னும் பெயர் கொண்டு வெளிவந்துள்ள இந்நூல், உலகப்புகழ் பெற்ற நயாகரா அருவி விக்டோரியா அருவி, சிவசமுத்திர அருவி, குற்றால அருவி என்னும் நான்கு அருவிகளைப் பற்றிய விவரங்களைத் தருவது.

புதிய உலகமாகிய அமெரிக்கா கண்டறியப்பட்ட வரலாறும் அங்குக் குடியேறிய வெள்ளையர் மேற்கொண்ட முயற்சிகளும், இவ்வாறே இருள்கவிந்த கண்டமாகக் கருதம் பட்ட ஆப்பிரிக்கா டேவிட் லிவிங்ஸ்டன் போன்ற தியாகவீரர் உழைப்பால் இருள் நீக்கப்பெற்ற வரலாறும், முதல் இரண்டு அருவிகளைப் பற்றிய பகுதிகளில் விளக்கத்திற்காகத் தரம் பட்டுள்ளன.

சோணாட்டை வளப்படுத்தும் காவிரி பற்றிய வரலாறும், உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுபயன் விளைக்கும் குற்றாலம் அருவியின் வரலாறும் நம் தமிழ் மாணவர் நன்கு அறிந். திருத்தல் வேண்டுமாதலால், இவை பற்றிய விவரங்கள் தெளி வாகத் தரப்பட்டுள்ளன.

இந்நூல் நன்முறையில் வெளிவருதற்கு வேண்டும். உதவிகளைப்புரிந்த உயர்திரு. வி.கோ.சூ. சுவாமிநாதன் அவர்களுக்கும், தியாகராசர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் சுப. அண்ணாமலை (பி.ஓ.எல். ஆனர்சு) அவர்களுக்கும்.. சி. கனக சபாபதி (பி.ஏ.ஆனர்சு) அவர்களுக்கும். என் மாணவர் வீ. வீராசாமி (பி.ஏ.) அவர்களுக்கும், சிவசமுத்திர மின்சாரத்திட்டம் பற்றிய பல விவரங்களை எனக்கு உதவிய வரும் 'மகளிர் இதழ்' என்னும் ஆங்கிலத் திங்கள் இதழின் அம்மையார் ஆசிரியருமாகிய பெங்களூர்த் திருவாட்டி எஸ்.கே. ஜகதீசுவரி (பி.ஏ.) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரியது.

தியாகராசர் கல்லூரி, மதுரை. } மா. இராசமாணிக்கனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/3&oldid=1692963" இலிருந்து மீள்விக்கப்பட்டது