நயாகரா அருவி 17 கருங்கழுகு அருவி பிரயாணிகள் மேலும் மிசௌரி ஆற்றோரமே சென்றனர். மொந்தான மாகாணம் என்று இப் பொழுது வழங்கும் பகுதியில் ஓரிடத்தில் மிசௌரி ஆற்றின் மிகப் பெரிய அருவி (நீர்வீழ்ச்சி) ஒன்றைக் கண்டனர்; அதனை இமை கொட்டாது வியப்புடன் நோக்கினர்; அவ்வருவியின் அடியில் மிகச் சிறிய தீவு இருத்தலைக் கண்டனர்; அத்தீவில் கழுகு கூடு கட்டி இருந்ததைப் பார்த்தனர். கூடு கட்டி இருந்த இடம், மனிதரோ, விலங்குகளோ போக முடியாதபடி நாற் புறங்களிலும் நீர் சூழ்ந்திருந்தது. படைத் தலைவர் இருவரும் அக்கழுகுக் கூண்டை நினைவிற் கொண்டு, அந்த அருவிக்குக் 'கருங்கழுகு அருவி' பெயரிட்டனர். மேற்கு நோக்கி எனப் படைத் தலைவரும் மற்றவரும் அரும்பாடுபட்டு ராக்கி மலைத்தொடரைக் கடந்து, சூலைத் திங்கள் 27 ஆம் நாள் ஓரிடத்தை அடைந்தனர். அந்த இடத் தில் மூன்று சிற்றாறுகள் சேர்ந்து மிசௌரி என்னும், பேரியாறு ஆகின்றன. அவ்விடத்தைக் கண்டு மகிழ்ந்த அவர்கள், மேடு பள்ளங்கள் நிறைந்தனவும் அஞ்சத்தக்க காட்சிகளைக் கொண்டனவும் ஆகிய காடு களைத் தாண்டி ஒரு சிறிய ஆற்றை அடைந்தனர்; தங்கள் படகுகளை அந்த ஆற்றில் விட்டு அவற்றில் ஏறிக்கொண்டனர். அச் சிற்றாறு அவர்களைப் பாம் யாறு என்னும் வேறோர் ஆற்றருகிற் சேர்த்தது. அப் பாம்பாறு மேற்கு நோக்கிப் பாய்ந்து பசிபிக் 2
பக்கம்:அருவிகள்.pdf/18
Appearance