________________
26 26 துணைப் பாடம் நிறைந்த இடத்தில் இரண்டரைக் கல் நீளம் ஆற்றின் ஓரமாகவே ஒரு பூங்காவை அமைத்துள்ளது. அதன் பெயர் விக்டோரியா பூங்கா என்பது. இப்பெயர் இங்கி லாந்தை ஆண்ட விக்டோரியா அரசியாரின் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும். அது 1925 முதல் பாது காக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூங்காவிலும் பல நிறங்களைக் கொண்ட ஒளி விளக்குகள் வைக்கப்பட் டுள்ளன. அவை நூற்று நாற்பத்து நான்கு கோடி மெழுகுவர்த்தி ஒளி உடையவை. அவை ஒவ்வொரு மாலையிலும் அருவிகளைத் தம் பன்னிற ஒளிகளால் அழகு செய்கின்றன. 0 ஏ அமெரிக்க அருவியின் இடப்புறம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களையும் கனடாவையும் இணைக்கும் சர்வதேசப் பாலம் ஒன்று ஏறத்தாழ நூற்றைம்பது அடி உயரத்தில் திறம்பட அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைத் தெய்வம் எழில் நடம் புரியும் இந்த அருவி -கள் உள்ள இடத்திற்கு ஆண்டு தோறும் ஏறத்தாழ இருபது லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகின்ற னர். அவர்கள் இயற்கையின் தோற்றத்தையும், அருவிகள் வாயிலாக இயற்கையின் ஆற்றலையும் கண்டு கண்டு இன்பப் பேறு பெறுகின்றனர். இங் ஙனம் வருகின்ற மக்களுக்கு வசதியாக, அருவிகளின் அருகில் நின்று பார்க்க மேடைகள் அமைக்கப் பட்டுள்ளன. அருவியிலிருந்து மின்சாரம் இயற்கையன்னையின் இதயமாக விளங்கும் நயாகரா அருவியைப் பார்க்கச் செல்வோர் தொகை,