உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 III விக்டோரியா அருவி 1. ஆப்பிரிக்கா இயற்கையமைப்பு உலகத்திலுள்ள கண்டங்களுள் மிகப்பெரியது ஆசியா. அடுத்துப் பெரியதாயிருப்பது ஆப்பிரிக்கா என்பது. இக்கண்டம் வடக்கே மத்திய தரைக் கடலை யும், தெற்கே இந்திய, அட்லாண்டிக் பெருங்கடல் களையும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலையும், கிழக்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாக உடையது. இப்பெருங்கண்டத்தில், ஆட்லெ ஸ், குவென்சோரி, டிராக்கன்ஸ்பர்க்கு என்பவை முக்கிய மலைத்தொடர்களாகும். கிலிமாஞ்சரோ, கெனியா என்பவை மிக்க உயரமான கொடுமுடிகள். காங்கோ, நைல், நைஜர், ஆரஞ்சு, சாம்பசி என்னும் பேரி யாறுகள் இக்கண்டத்தில் பாய்கின்றன. ஆல்பர்ட்டு, சாடு,எட்வர்டு,நியாசா, தாங்கன்ஈகா, விக்டோரியா என்னும் சிறப்புடை ஏரிகள் இங்கு அமைந்துள்ளன. சகாராப் பாலைவனமும் கலஹாரிப் பாலைவனமும் இக் கண்டத்தில்தான் இருக்கின்றன. ஸ்டான்லி, விக் டோரீயா என்னும் சிறப்புடை அருவிகளும் இக் கண்டத்தில் அமைந்துள்ளன. ஆப்பிரிக்காக் கண்டத்தை மூன்று சிறப்புப் பகுதி -களாகப் பிரிக்கலாம். ஒரு பகுதி பாலைவனம்; மற் றொரு பகுதி புல்வெளி; பிரிதொரு பகுதி காடுகள். இக்கண்டத்தின் நடுப்பகுதி, கதிரவன் பெரும்பாலும் நுழைய முடியாத காடுகளைக் கொண்டது. காட்டுப் பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலும் புல்வெளிப் 3 இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/35&oldid=1692995" இலிருந்து மீள்விக்கப்பட்டது