உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 துணைப் பாடம் அதன் வழியே ஏறத்தாழ இருநூறு கல் தொலைவு சென்று, * பைசானியா என்னும் நகரை அடைந்தார்; உள் நாட்டில் வழங்கும் மக்களின் மொழியையும், பற் பல இடங்களுக்குச் செல்லும் வழியையும் பலர் வாயி லாக உணர்ந்து கொண்டார்; சிறிது காலம் அங்குத் தங்கிச் சுதேசிகள் பேசிய மொழியை ஓரளவு கற்றார்; சுதேச மொழிகள் பலவற்றை அறிந்தவனும், ஆங் கிலம் அறிந்தவனுமாகிய நீகிரோவர் இருவர் துணை யைக் கொண்டு உள்நாடு செல்ல முயன்றார். வழியில் பல ஊர்களில் இருந்த தலைவர்கள் பார்க்கை வரவேற்று, வேண்டும் உதவிகள் செய்த னர். சில இடங்களில் சுதேசிகள் எதிர்ப்புப் பலமாக இருந்தது. அதனால் பார்க்கு அவர்கள் அறியாதபடி இரவில் பிரயாணம் செய்தார்; கொடிய விலங்குகள் வாழும் காடுகளைக் கடந்தார்; இறுதியில் 'செனிகல்" என்னும் ஆற்றின் கரையை அடைந்தார். அதன் எதிர்க் கரையைத் தாண்டிச் செல்லுதல் வேண்டும் என்று பார்க்கு விரும்பினார். அப்பகுதியிற் செல்லும் புதியவர் அப்பகுதிக்குரிய அரசனுக்குப் பெருந் தொகை அளித்த பின்பே, அப்பகுதியினுள் நுழைய அநுமதிக்கப்படுவர். மங்கோ பார்க்கு, அப்பெருந் . கடந் தாகையைக் கொடுத்து அந்நாட்டைக் தார். அடுத்து இருந்த சில நாடுகளைக் கடந்து செல்லுகையில், ஒரு நாட்டு அரசன் அவர்மீது ஐய முற்று அவரைச் சிறையில் அடைத்தான். பாவம்! நாடு காணச் சென்ற பார்க்கு-ஒரு குற்றமும் செய்யாத பார்க்கு-பல நாள் சிறையில் துன்புற்றார்; ஒரு நாள் * Pisania

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/40&oldid=1693000" இலிருந்து மீள்விக்கப்பட்டது