உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டேவிட் லிவிங்ஸ்டன்

________________

42 2 தென் ஆப்பிரிக்கா டேவிட் லிவிங்ஸ்டன் மங்கோ பார்க்கின் தியாகத்தால் மேற்கு ஆப்பிரிக்கா பொதுவாக ஐரோப்பியருக்கும் சிறப்பாக ஆங்கிலேயருக்கும் விளக்க முற்றாற் போலவே, உலகப் புகழ் பெற்ற விக்டோரியா அருவி இருக்கும் தென் டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவைப் பற்றிய விவரங்கள் டேவிட்லிவிங்ஸ் டன் என்பவரது தியாகத் தால் வெளியாயின. இப் பெரியாரது வரலாறு நமக் குத் தென்னாப்பிரிக்காவைப் பற்றிய விவரங்களை நல்க வல்லது.ஆதலால் அதனை ஈண்டுச் சுருக்கமாக அறிதல் நல்லது. இளமையும் கல்வியும் லிவிங்ஸ்டன் 1813இல் ஸ்காட்லாந்தில் எளிய குடும்பத்திற் பிறந்தவர். அவர் தம் பெற்றோர் பொரு ளில் எளியவராயினும் சிறந்த ஒழுக்கமுடையவர். அதனால் லிவிங்ஸ்டன் இளமை முதலே நன்கு வளர்க்கப்பட்டார். வறிய குடும்பத்திற் பிறந்த காரணத்தால், அவர் இளமையிலேயே பஞ்சாலையில் வேலை செய்ய வேண்டியவரானார். எனினும், படிப்பில் மிக்க ஆர்வம் கொண்ட அவர், வேலை செய் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/44&oldid=1693003" இலிருந்து மீள்விக்கப்பட்டது