உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 71 கொண்டே இருக்கிறது. இந்த இடைவிடாச் சுரப்பே காவிரிக்கு 'உயிர் ஆறு' என்னும் பெயரை வழங்கியது. இவ்வூற்றைச் சுற்றிலும், முப்பதடி சதுரமான குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குளத்தில் எப்பொழுதும் இரண்டரை அடி நீர் மட்டும் இருக்கும்படியும், எஞ்சிய நீர் வெளியே செல்லுமாறும் மடை அமைக்கப்பட்டுள்ளது. இவ் வாறு வெளிச் செல்லும் நீரே காவிரியாக உருவெடுக் கிறது. இங்ஙனம் உருக்கொள்ளும் காவிரிக்குத் 'தலைக் காவிரி' என்பது பெயர். குளத்திற்கு மேல் கரையில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவிலுள் காவிரித்தாயின் சிலை உருவம் அமைக் கப்பட்டுள்ளது. மக்கள் காவிரி ஆற்றை அம்மனாக உருவகப்படுத்தி வணங்குமிடம் இதுவாகும். இந்திய நாட்டு மக்கள் பலரும் தலைக் காவிரியில் மூழ்கிக் காவிரி அம்மனை வணங்கிச் செல்கின்றனர். துலா மாதம் எனப்படும் ஐப்பசித் திங்களின் தொடக் கத்தில் குடகுநாட்டு மக்கள் தலைக்காவிரியில் கூடி விழா அயர்கின்றனர்; காதோலை, கருமணி முதலிய மங்கலப் பொருள்களை நீரில் இடுகின்றனர். காவிரீயின் போக்கு கனகா காவிரி பற்பல காடுகளைக் கடந்து மலைகளின் ஊடே பாய்ந்து பாகீ மண்டலம் என்னும் இடத்தில் என்னும் துணையாற்றைப் பெறுகின்றது. அங்ஙனம் துணையாற்றைப் பெறும் இடத்திலிருந்தே காவிரி சிறிது அகன்று, 'ஆறு' என்னும் உருவத்தினை அடைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/73&oldid=1693021" இலிருந்து மீள்விக்கப்பட்டது