உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 பொன்னியாறு துணைப் பாடம் காவிரியாற்றில் பொன் துகள்கள் படிந்து வந்த காரணத்தால் காவிரிக்குப் 'பொன்னி' என்று அறிஞர் கூறுவர். செல்வத்தைப் பொன் என்று கூறுதல் மரபு. இம்மரபின்படி செல்வவளத்திற்குக் காரணமான காவிரியாற்றைப் ‘பொ ன் னி’ என முன்னையோர் அழைத்தனர் என்று கொள்ளுதலும் பொருத்தமாகும். நீரும் மணலும் இங்ஙனம் வற்றாத வளம் சுரந்து, சோணாட்டைச் சோழவள நாடாக்கிய காவிரியை அக்காலச் சான்றோர், தாம் அதனிடம் காட்டிய அன்பு மிகுதியால், 'தெய்வக் காவிரி', 'புண்ணிய நன்னீர்', 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்று பலவாறு பாராட்டியுள்ளனர்; அரச ரையோ மக்களையோ வாழ்த்தும்போது, 'காவிரி மணலினும் பலவாக நின் வாழ் நாட்கள் வளர்க என்று வழிவழியாக வாழ்த்திவந்தனர். இவ்வாறு காவிரியாற்று நீர் சோழநாட்டை வளம் பொருந்திய நாடாக்கியது; அவ்வளமை காரணமாகச் சோழர்க்கு 'வளவர்' என்று பெயர் வழங்கச் செய்தது. அதன் மணல் சோழரையும் சோணாட்டு மக்களையும் வாழ்த்தப் பயன்பட்டது. இவை இரண்டும் பண்டை இலக்கியங்களில் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளன. காவிரியின் தோற்றம் காவிரியாறு குடகுநாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சையமலை உச்சியில் தோன்றுகிறது. இதன் தோற்றத்திற்குக் காரண மான நீரூற்றுத் தடைப்படாமல் இன்றளவும் சுரந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/72&oldid=1693033" இலிருந்து மீள்விக்கப்பட்டது