________________
63 தமதி. மாதவி இருவரும் முற்பிறப்பில் தாரை, வீரை என்று இலக்குமியின் சகோதரிகளாகப் பிறந்து, பின் துச்சய மன்னன் மனைவியாகி, அறவண அடிகள் நல்லுரையால் பாத பங்கய மலையை வலம் வந்து நல்வினைப் பயன் பெற் றதை முதற்பகுதி கூறுகிறது. இரண்டாவது பகுதி, தாரை வீரை சகோதரிகள் இறந்து பட்ட விதத்தைக் கூறுகிறது. முன் பிறவியில் தாரை வீரை சகோதரிகள் 'பாதபங்கள் மலையைச் சுற்றிய நல்வினையால் இப்பிறவியில் வெங் வேறு இடத்துப் பிறந்தும், மணிமேகலையுடன் அன்புத் தொடர்புடையவர்களாகப் பிறந்துள்ளனர் என்பதை இக் கதை மூலம் சாத்தனார் படைத்துக் காட்டுகிறார்.இக்கதை பௌத்த கருத்தான 'வினைப் பயன்' கூறும் நோக்கிலும். பௌத்த நம்பிக்கையான 'புத்தன் காலடிச் சுவடு படித்த மலையை வணங்கி எழுவதால் வரும் நற்பேற்றைக் கூறும் நோக்கிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. காப்பியத் துணை. மாந்தர்களின் முற்பிறப்புக் கதையைப் பேசுவதால் இதை ஒட்டிய கதையாகக் கொள்ள முடிகிறது. 8.4 7 விசுவாமித்திரன் கதை: . பசிப்பிணி என்னும் கொடுமையைப் பேசவந்த கதை இது. பௌத்த மதக் கொள்கைகளில் ஒன்று பசிப்பிணி நீக்குதல்', பசியின் கொடுமை, ஏழையை மட்டும் அல்ல. உயர்ந்தோரையும், ஏன் முற்றும் துறந்த முனிவரையும் பாதிக்கிறது என்பதை இக்கதை மூலம் சாத்தனார் படைத் துக் காட்டுகிறார் இக்கதையைத் தீவதிலகை மணிமேக லைக்கு எடுத்துச் சொல்லுகிறது. விசுவாமித்திர முனிவன் பசிப்பிணியின் கொடுமையா உண்ணும் உணவு வகைகளில் யாதொன்றும் பெற முடியது மல், இறந்த நாயினைத் தின்னப் புகுந்த கொடுமையை