________________
67 அச் சாத்தனார் எடுத்துக்காட்டுகிறார். இவ்வுலகில் வாழும் நன்மக்கள், பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்னமயின் நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநர சுடைதலும் உண்டென உணர்தலின் 11 கள்ளுண்பது தீவினை பயக்கும் என்று அறிந்து ஒதுக்கியதைச் சாத்தனார் இக்கதைவாயிலாக அழகாக எடுத்துக்காட்டு- கிறார். இவ்வுலகில் வாழ, மக்கள் செய்யவேண்டிய நல்ல. றங்கனச் சாதுவன் கூற்றாக எடுத்துரைக்கிறார். சாத்தனார். இக்கதையை ஒரு சிறந்த அறிவியல் நோக் குடைபதாகவும் படைத்துள்ளார். இவர், இக்கதையில் உயிருண்மை பற்றியும், மறுபிறப்புப் பற்றியும், கனவு பற்றி யும் பேசும் கருத்துக்கள் இன்றைய திபெத்திய ஞானியான 'உயர் வாமா டாக்டர் டியூஸ்டே லாப்சாங் ராம்பா கூறிய 'உயிருண்மைக் கருத்துக்களுடன் அப்படியே பொருந்தி வரு கின்றன. வியக்கத்தக்க வகையில், அன்றே உயிருண்மை பற்றிய தெளிவான சிந்தனையை இக்கிளைக் கதைமூலம் தந்து உயர்ந்துள்ளார் சாத்தனார். ஆனால் காப்பிய ஓட்டத்தைப் பொறுத்தவரை, இக் கதை தேவையில்லாத ஒன்றாக விளங்குகிறது. சாத்த னார் பௌத்தம் பேசுவ தற்கென்றே இக்கதையைப் படைத் துக் கொண்டதால், இதை ஊன்று கிளைக்கதையாகவே கொள்ள முடிகிறது. 3.4.11 காய சண்டிகை வரலாறு . காயசண்டிகை தன் வரலாற்றைத் தானே, மேகலை யிடம் கூறுவதாக இக்கதைப் படைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு சாப வரலாற்றுக் கதை, யானைத்த நோயால் அவதிப்