________________
74 கதையைச் சாத்தனாரும் தன்காப்பியத்தில் கிளைக்கதை- யாக எடுத்தாண்டுள்ளார். மேகவை, கண்ணகியிடம்,அவள் குணம் பல ஏத்திய பின், ஆற்புக்கட னில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு துங்கடன் முடிந்தது அருளில் வேண்டுமென்று க கேட்க, கண்ணகி, அதற்குக் காரணம் முன் செய்வினைக் கடன் என்று இக்கதையைக் கூறுகிறாள். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கதைப் பொருளே இங்கும் கூறப்பட்டுள்ளது. புத்தபகவான் பிறப்பு பற்றியும், வினைப்பயன் பற்றியும், மேகலையின் வருங்கால நிலைபற்றியும் கண்ணகி பேசுவதாக சாத்தனார் படைத்துக் காட்டியிருக்கிறார். சாத்தனார், தன் இயல்பிற்கேற்ப, கண்ணகியையும் பௌத்தம் பேசவைத்துள்- ளார்.முன் நூலில், கோவலனைச் சாவக நோன்பிகளாக அடி- கள் படைத்துக் காட்டியுள்ளார். ஆதலால், சாத்தனார் அப் பாத்திரத்தைத் தன் கொள்கைக்கேற்ப மாற்றம் செய்ய. வில்லை.அதனால்தான். கோவலனை விட்டுவிட்டுக்கண்ணகி வாயிலாகப் பௌத்தம் பேசுகிறார். . கண்ணகி, தான் மதுரையை எரித்தது தீவினையாகும் என்று கூறுவதாகவும்,அதன் பயனை இனிபிறவிகள் எடுத்து அனுபவிப்பேன்' எனக் கூறுவதாகவும் காட்டி. வினைப் புய- னுக்கு தப்பாதவர் ஒருவரும் இல்லை என்று சாத்தனார் எடுத்துக் காட்டுகிறார். மேலும், நல்வினை காரணமாக நற் பேறு பெற்றாலும், செய்த தீவினையானது அழியாது: அது மறு பிறவி எடுக்கும் போது தொடர்ந்து வந்து தன் பயனை நல்கும்' என்ற பௌத்த கொள்கையைக் கண்ணகி வாழ்க்கை மூலமாகவும் சொல் மூலமாகவும் படைத்துக் காட்டுகிறார் சாத்தனார். சிலப்பதிகாரத்தில் - இது ஒட்டியக்கதையாக படைக் கப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு இக்கிளைக் கதையின்