________________
98 காட்டிலும், இக்கதைகள் மூலம் பௌத்தர்களின் முற்பிறம்- எடுத்துக் காட்டியுள்ளார் என்பதே புக் கொள்கையை பொருந்தும். 4.6 சிலப்பதிகாரத்தில் மொத்தக் கிளைக்கதைகளில் ஒரே ஒரு கிளைக்கதை மட்டும் காப்பியப்புலவரால் சொல்லப் பட்டுள்ளது. மணிமேகலையில் அனைத்துக் கிளைக்கதை- களுமே பாத்திரக் கூற்றாகவே அமைந்துள்ளன. 4.7 மணிமேகலையில் 'ஆபுத்திரன் கதை' காப்பியத்துள் ஒரு சிறு காப்பியம் போல் அழகுறப் பின்னப்பட்டுள்ளது. இக்கதை மட்டும் மூன்று காதைகளில் பேசப்பட்டுள்ளது. பௌத்த மதக்கொள்கைகளைப் பேசும் கதை என்றாலும். மனிதப்பண்புகளும். நடப்பியலும் இணைந்து பின்னப்பட்ட அழகிய கதை. இப்படி, காப்பியத்தில் ஒரு சிறு காப்பியமா கப் பின்னப்பட்ட கிளைக்கதையைச் சிலம்பில் காண முடி. யாது, அதாவது, இளங்கோ அடிகள் மையக்கதைப் படைப் பிற்கே முதலிடம் கொடுத்து, கிளைக்கதைப் படைப்பிற் குத் துணையிடம் நல்கியுள்ளார். ஆபுத்திரன் கதையைப் பொறுத்தவரை, மையக் கதைக்குக்கொடுத்த முக்கியத்து- வத்தைக் கிளைக்கதைக்கும் கொடுத்துப் படைத்துள்ளார். சாத்தனார். 4.8 சிலப்பதிகாரத்தில், கிளைக்கதைகள் மையச்- கதையை அழுத்திவிடும் அளவிற்குச் செல்வாக்குப் பெற வில்லை. ஆனால் மணிமேகலையைப் பொறுத்தவரை மையக்கதையை அழுத்திவிடும் அளவிற்குக் கிளைக்கதைகள் செல்வாக்குப் பெற்றுள்ளன. மணிமேகலையின் பிற்பகுதி யில் இப்படிக் கிளைக்கதையின் செல்வாக்கு அதிகரித்திருப் பதால், மையக்கதைப் பகுதியைச் சாத்தனாரால் சுவைபட அமைக்க முடியவில்லை என்று கூறலாம். இதிலிருந்து, ஒரு காப்பியம் சிறக்க வேண்டுமானால், மையக் கதை முத