________________
128 விடய செயல்களை எல்லாம், அவள்மேல் ஏற்றிக் கூறுகின் றனர். அச்சூழலில் அவர்கள். விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் ண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்!" என்று ஏத்திப் பாடுகின்றனர். இச் சூழலில் திருப்பாற்கடல் கடைந்த வரலாற்றில் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகிறது. இவர்கள் இக்கதையில் திருமால் பெற்ற பங்கைக் கூறவில்லை. இவ்வாறு, சிவன் திருமால் இருவர் பேரிலும், பாற்கடல் கடைந்த நிகழ்ச்சியைப் படைத்துக்காட்டுவதுடன், அவ்வல் சமய மகளிரின் வாயிலாகப் படைத்துக் காட்டி பொருத்தக் முறச் செய்கிறார் அடிகள். இவ்வாறு, சிலம்பில் பலகதைகள் பரவுமொழியாக வரும் துணைக் கதைகளாகவே படைத்துக் காட்டப்படடுள்ளன. 6.2.3 கொற்றவை பற்றிய துணைக்கதைகள் சிலப்பதிகாரத்தில் கொற்றவை பற்றி ஐந்திற்கும் மேற் பட்ட கதைகள் பயின்று வந்துள்ளன. வேட்டுவரியில், கொற் றவை பரவும் பாடல்கள் தவிர,பிறஇடங்களிலும் அவளைப் பற்றிய கதை நிகழ்ச்சிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. மாதவி- யின் ஆடலைப் பற்றிக்கூறும் போது, கொற்றவை மரக்கால் கொண்டு ஆடிய ஆடலை அவள் ஆடுவதாகக் காட்டுகிறார். இங்கு, 'அவுணர் போருக் காற்றாமல் வஞ்சக்கால் வெல்லக் கருதிப் பாம்பும் தேளும் பிறவியாய்ப் போர்க்களந்தே புகுந்து மொய்த்தலின் கொற்றவை அவற்றை அழிக்க மரக்கால் கொண்ட நிலைகதையாக இடம் பெறுகிறது. வழக்குரைக் காதையில் காளியின் தோற்றத்தில் காட்சி. கிளிக்கும் கண்ணகியை வர்ணிக்குமுகமாக மூன்று ததைகள் எடுத்தாளப்படுகின்றன. இங்கு, கொற்றவை மயிடாசுரனைக் கொன்ற வரலாறும்.இறைவனை ஆடலகண்டருளிய நிலை