________________
160 பேசியவர், அது கடலால் உண்ணப்பட்டதை ஏன் பேச வில்லை? இவ்வாறு. இந்நிகழ்ச்சிகள் படைத்துக்காட்டப் படாத போக்கிலிருந்து. சிலப்பதிகாரம் மேகலைக்கு முன்பே படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. . முடிவாக, சிலப்பதிகாரத்தில் மேகலை துறவு பூண்டவர வாறு பேசும் கிளைக்கதையைக் கொண்டு, அடிகள் சிலம்பை இயற்றிய காலம், மாதவி துறவறம் படுத்தப்பட்ட காலமTசு இருக்கவேண்டும் என்று கருதலாம். அதாவது மற்ற அனுப வங்களையும், பேற்றையும் மேகலை பெறுவதற்கு முன்பே சிவம்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். மணிமேகலை காப்பி யம், மேகலை, மன்னன் மகனால் மனச்சலனமுற்று பின்பு மனத்தெளிவு பெற்று, ஒருமையுடன் துறவு வாழ்க்கைப்?- பேணி. அமுதசுரபி பெற்று, அதன் மூலம் பசியைத் தீர்த்து அறப்பணி புரிந்த நிலைக்கும், சமயவாதிகளுடன் மேகலை சொற் போர் புரிந்து வென்று. பக்குவப்பட்டை சிறந்த துறவியாக உருவான நிலைக்கும் பின்னால் எழுதப்பட்ட காப்பியுமாக இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. . இவ்வாறு, கிளைக்கதைகள் காப்பியங்கள் பற்றிய மு- மையான ஆராய்ச்சிக்கும் பெருந்துணைப் புரிகின்றன. அடிக்குறிப்புக்கள் i.சிலப்பதிகாரம்., 30:10-11 2.மேவது., 30:27-28. 0