உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதம்

23

விட வேண்டாம். செய்வது சரிதான்; நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ், இலக்கியகர்த்தாவிற்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடிய சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு, என்ன எழுதிக் கொட்ட வேண்டியதிருக்கிறது. இதில் வாழும் கிரந்தகர்த்தா மனமிழந்து பாழாய்ப் போவான்; ஆனால், சிங்காரவேலு இப்படி நாசமாவதற்குக் கோழையல்ல. தைரியத்தினால் ஏற்பட்ட மனக் கசப்பு, அவரை ஒன்றும் எழுத விடவில்லை.

சிங்காரம் சமூகத்தில் நம்பிக்கை வைத்த மனிதர். ஓடித் தளர்ந்த சிந்தனைகள் எல்லாம், ஈட்டி குத்தும் மாதிரி கதைகளைச் சிருஷ்டித்தன.

அன்று,

எப்பொழுதும் போல், அந்தத் தனியறையில் பாயில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.

வெற்றிலையை மென்று, மென்று துப்பியாகி விட்டது.

என்ன செயற்கை ஊக்கம் கொடுத்தாலும், அந்தக் கதையைத் தொட முடியவில்லை.

ஏழு நாட்களாக இந்தக் கதிதான்.

கையிலிருந்த பேனாவையும், காகிதத்தையும் கீழே பொத்தென்று போட்டார்.

பின்புறமிருந்த தலையணையில் சாய்ந்து கொண்டு, வெற்றிலைச் செல்லத்தைப் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு, வெற்றிலை போட ஆரம்பித்தார்.

அதுவும் ஒரு கலை—அவருக்கு.

தெரு வாசல் படியில் யாரோ வருவது போல், காலடிச் சப்தம்.

“சிங்காரம்!” என்ற குரல்.

“சுந்தரமா? வா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/24&oldid=1694239" இலிருந்து மீள்விக்கப்பட்டது