உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதம்

25

அந்தக் கதை அதுவும் அப்படியே அரைகுறையாகத்தான் கிடக்கிறது.

“ஸார் தபால்” என்ற சப்தம்.

சிங்காரவேலுவிற்குக் கடிதம் வருவது விதி விலக்கு. முக்கால் வாசி தவறுதலாக, வேறு யாருக்காவது போக வேண்டிய கடிதம் இங்கு வந்து விடுவது உண்டு. துணைத் தபால்காரனாக, இவரும் சிரமப்பட வேண்டியதிருக்கும்.

ஜன்னல் வழியாக விழுந்த கடிதத்தை எடுத்து, விலாசத்தைக் கவனித்தார். அதில் ஒன்றும் தவறு இல்லை. விலாசம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், கையெழுத்து அவருக்கு அறிமுகமானதாக இல்லை. தபால் முத்திரை எப்பொழுதும் போல் ஒரே கருப்பு மயமாக இருந்தது.

பிரித்து வாசிக்கிறார்

விசாகப் பட்டி
10-9-33

இலக்கிய கர்த்தரான திரு. சிங்காரவேலு அவர்கள் திவ்விய சமூகத்திற்கு,

நான் பெரிய படிப்பாளி ஒன்றுமில்லை; ஆனால், கலையில் எனக்கு ஆர்வம் மிகுதியும் உண்டு.

தங்கள் சிறுகதைகளுக்கு நிகராகத் தமிழ் இலக்கியத்திலேயே (எனக்கு ஆங்கிலத்திலும் சிறிது பயிற்சி உண்டு) பெரும்பான்மையாகக் கிடையாது என்று சொல்லுவேன். தங்கள் ‘சாலாவின் சங்கடங்கள்’ என்ற சிறுகதை வாழ்க்கையின் உயிர்பெய் ஓவியமாக இருக்கிறது.

அது ஒரு புதிய மனித உலகத்தையே திறந்து காண்பிக்கிறது. அதைப் பற்றிப் புகழ்வதற்கு, நானும் ஓரளவு எழுதும் பயிற்சி பெற்றவனாக இருந்தால்,. எனது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே எடுத்துரைப்பேன். ஆனால், அந்தோ! அவ்வளவும் மூங்கையன் கண்ட கனவாகவே இருக்கின்றன. இன்னும், தங்கள் எண்ணிறந்த கதைகளை விடாது படித்து வந்தவர்களில் நானும் ஒருவன். இன்னும் புதிய கற்பனைகளை, கனவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/26&oldid=1694329" இலிருந்து மீள்விக்கப்பட்டது