உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தொய்வு இல்லை! தொடர்க பயணம்!” உடன்பிறப்பே, வியாபாரிகள் நீண்ட காலமாகக் கோரி வந்த பலமுனை வரிகளை ஒரு முனை வரியாக மாற்றி, அப்படி மாற்றும் போது பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களுக்கு மூன் றரை சதவிகிதம் வரி என்று குறைத்து, விறகு, மாட்டுத் தீவனம், கண்ணாடி வளையல்கள் ஆகியவற்றுக்கு முழுமை யாக வரி விலக்குச் செய்து, சிறுகடை வியாபாரிகள் இரு பத்தையாயிரம் ரூபாய் வியாபாரம் செய்யும் வரையில் விற்பனையில் வரி கட்டவேண்டியதில்லை என்று இரண்டு ஆண்டுக்கு முன் இந்த அரசு செய்த முடிவை, மேலும் மாற்றி...ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் வியாபாரம் செய்யும் ஏறத்தாழ 40 ஆயிரம் சிறு கடைக் காரர்களுக்கு விற்பனை வரி இல்லை என்று சலுகை அளித்து, வெளியிடப்பட்டுள்ள நமது கழக அரசின் நிதி நிலை அறிக் கையை, வரிபோட்டு வாட்டுகிற அறிக்கை" என்று சிலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். அரிஷ்டம் என்று கூறப்படும் மயக்கம் தரும் பொருளுக்கு முப்பது சதவீத வரியும், மது வகையறாக்களுக்கு இருபத் தைந்து சதவீத வரியும், பத்து லட்ச ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்கிற பெரும் வியாபாரிகளுக்கு மேலும் ஐந்து சதவீத உபரி வரியும் விதிக்கப்பட்டிருப்பது அந்த சமதர்மவாதிகள்" கோபத்தைக் கிளப்பியிருப்பதாகத் தெரிகிறது. சக்தி பைப் நிறுவனத்தையும், கோவை 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/59&oldid=1694558" இலிருந்து மீள்விக்கப்பட்டது