உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேதின வாழ்த்து! உடன்பிறப்பே, அமெரிக்க நாடு சென்றிருந்தபோது சிகாகோ நகரில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். நகரில் நுழைந்த தும் எனக்கு ஏற்பட்ட முதல் நினைவு மேதினம்தான்! ஆம், அங்கேதான் 1886 GLD முதல் நாளிலிருந்து தொழிலாளிக்கு எட்டு மணி நேர வேலையென்பதை சட்டப் படியாக்க வேண்டுமென்று தொழிலாளர்களின் புரட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதன் தொடர்பாக எழுந்த போராட்டத்தில் கண்ணீரும் செந்நீரும் கலந்து ஓடியது தெருக்களில் ஆறு போல! உழைக்கும் தோழனின் மே தினக் குரல், உலகெங்கும் எட்டியது. அந்தக் குரலை தமிழகத்தில் ஒலிக்கச் செய்த பெருமை, பெரியாருக்கே உண்டு. பேரறிஞர் அண்ணா அவர்கள் மே தினத்தின் சிறப்புக் களை, மேடைகளில் - ஏடுகளில் எத்தனையோ முறை எடுத்துக் காட்டியிருக்கிறார். எழுச்சிமிகு தமிழாலே விடு நமது அரசு, அமைந்ததும் மே தினத்திற்கு முறையை அறிவித்தது. இது தொழிலாளர் நல அரசு என்று அண்ணா அடிக்கடி சுட்டிக் காட்டினார் ஆதாரங் களோடு! அவர் வழிநின்று நாம் தொழிலாளர்க்கு, அரச அலுவலர்க்கு ஆற்றிடும் பணிகள் ஆயிரம்! ஆயிரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_3.pdf/66&oldid=1694566" இலிருந்து மீள்விக்கப்பட்டது