உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கலைஞர் முதல் வரியைப் படித்துப் பார். 'கடமைகளைச் சரிவர நிறைவேற்றாத தி.மு.க. வாசகமே தொடங்குகிறது! கட்டுப்பாடு இழப்பது - கட்சி தாவுவது- கண்ணியமிழந்து பேசுவது- இந்த மூன்று அபச்சாரங்களும் பிரமுகர்கள்’ என்றுதான் எப்போது நடைபெறு கின்றன - கடமைகளைச் சரிவர நிறைவேற்றாத போது! உடன்பிறப்பே! உன்னைப் போல் கடமைகளைச் சரிவர நிறைவேற்றி - அண்ணா வழியில் அயராது உழைக்கின்ற கழகக் கண்மணிகளுக்கு, 'கல்கி’ எடுத்துக் காட்டுகின்ற 'அபச்சாரம்' என்ற வார்த்தை, நிச்சயம் பொருந்தாது! என் பிறந்த நாளில் கொடும்பாவி கொளுத்துமாறு அறிக்கைவிட்ட தலைவர்களின் போக்கையும் -என் தலையை வெட்டித் தன் காலடியில் வைக்க வேண்டுமென் று வீர மொழிபேசிய நண்பர்களின் போக்கையும்- நான், எவ்வளவு பொறுமையோடும் அடக்கத்தோடும் விமர்சித்தேன் என் பதை 'கல்கி' ஆசிரியர் உணராதவர் அல்லர்! "மரத்தை வெட்டுகிறவன் கூட, களைத்துப் போனால் ஓய்வெடுப்பதற்கு இன்னொரு மரத்தின் நிழலில்தான் அமரு கிறான்; 'நம்மையும் இவன் வெட்டுவானே, என்று று நினை யாமல், அந்த மரம், அவனுக்கு நிழல் தருகிறது! அதுபோல, அரசியலில் நம்மைத் தாக்குவோரிடத்திலும் நிழல் தரும் மரம் போல அன்பு காட்ட வேண்டும்" என்று கூறிய அண்ணாவின் பொன் மொழியை நெஞ்சில் நிறுத்தித்தான், நாம் இயக்கம் நடத்துகிறோம்; ஆயினும் அபவாதங்கள்- அவதூறுகள் - களங்கப்படுத்துவதற் கென்றே கற்பிக்கப்படும் பொய்கள் ஆகியவற்றைக் கேட்டு