இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12
தான் அவன் நெஞ்சில் வைத்துப் போற்றுவான்!
இல்லையேல் அவர்களை நஞ்சில் தோய்த்த பண்ட
மாகக் கருதி வீசி எறிவான்!
ஏனெனில் அவன் பீடி சுற்றியோ--மூட்டை
தூக்கியோ- ரிக்ஷா ஓட்டியோ- வாய்க்கால்
தோண்டியோ-வரப்பு வெட்டியோ- சம்பாதித்த
காசு! வயிற்றைக்கட்டி, வாயைக் கட்டி, வாழை
யடி வாழையாக வாழ வேண்டிய தனது கட்சிக்
காக அவன் செலுத்தும் காணிக்கை! அதில் சேதாரம்
ஏற்பட்டால் சிந்தை குலையும் அவனுக்கு!
அவனது உழைப்பை உறிஞ்சியதால் உயர்ந்
தோர், அவனை உதைத்தால்கூட அவன் கவலைப்பட
மாட்டான்; அவன் கட்டிக்காக்கும் கட்சிக்குத்
துரோகம் செய்துவிட்டு பதவிக்காக-பவிஷுக்காக -
பணத்திற்காக- வேலி தாண்டுபவர்களை அவனால்
சகித்துக் கொள்ள முடியாது! குமுறிக் குமுறி அழு
வான்! பலிக்குமோ, பலிக்காதோ அதுபற்றிக் கூடக்
கவலைப்படாமல் சபிப்பான்! சாபம் கொடுப்பான்!