உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா ஜோதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


அந்த உத்தம உடன்பிறப்பு ஓட்டத்தை நிறுத் தாமல் கரூர் மாநாட்டு மேடையில் அண்ணா சுடரை என் கையில் அளித்தான்! கரத்தைக் குலுக்கினான்! ஆனால் இப்பொழுதும் நினைத்துப் பார்க் கிறேன்; தீபச்சுடருடன் அந்தத் தியாகசீலன் சாலை யில் ஓடிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது! ஓர் இளைஞன்! ஒரு நூறு இளைஞர்கள்! . ஓராயிரம் இளைஞர்கள்! ஒரு லட்சம் இளைஞர்கள்! ஒரு கோடி இளைஞர்கள்! அனைவரின் கரங்களிலும் அண்ணா சுடர்! அணையாத அந்த தீபச்சுடர்! கழகத்தின் ஜோதி! களங்கமற்ற ஜோதி! எங்கும் ஒளிவெள்ளம்! பொல்லா இருள்போக் கும் புத்தொளியின் வீச்சு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/15&oldid=1718262" இலிருந்து மீள்விக்கப்பட்டது