உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 7 பூஞ்சோலை அங்கிருப்பாள். பிள்ளைப் பேறா? பூஞ்சோலை அடி யெடுத்து வைத்தாலே போதும்-சுகப் பிரசவந்தான் எனப் பெரியோர்கள் புகழ்ந்திடுவர். பொங்கலுக்குப் புதுப்பானை, புதிய சட்டி பூஞ்சோலை கையால்தான் வாங்கவேண்டும் என்ற பேச்சு அந்த வட்டாரம் முழுவதிலும் அடிபடும். பார்க்க மஞ்சள் முகத்தில் எடுப்பான குங்குமத் திலகம்- பெரு 'நோக்கு-சாந்த முகம்-குடும்பத்தின் கவலையால் உள்ளத்தில் புயல்! சுருளிமலை அடங்காத பிள்ளையாகி விட்டானே என்ற ஏக்கம்-மகளுக்கு ஏற்ற வரன் கிட்டவில்லை என்கின்ற துக்கம் அழகு திருக் குமாரிக்கு அணிகலன்கள் பூட்டிப் வேண்டுமென்கின்ற தனியாத ஆசை-மண்ணாலே செய்வ தென்றால் மலைபோல குவித்திருப்பாள் அணிமணிகள் ! பொன்னாலன்றோ செய்ய வேண்டும்-அதனால்தான் போலும் மனத் திருப்திக்காக மகளுக்குப் பொன்மணி என்று பெயராவது வைப்போம் என்று வைத்துவிட்டாள்........... பூவார் சோலைப் புது மயில் ! பொங்கும் இளமை எங்கும் சிந்தக் காட்சி தரும் கட்டழகு! மொட்டவிழா மல்லிகைபோல் பல் வரிசை-வட்ட நிலா மண்மீது வந்ததுபோல் முகப் பொலிவு! அந்த அழகுச் சிலை மண்மீதும், சுடு நெருப்பின் ஜூவாலைதனை வீசுகின்ற சூளை மீதும் உழன்றதாலே இயற்கை எழில் மறைத்து ஏழை வீட்டு முற்றத்திலே ஏங்கியது. உலகம், தன் வீட்டோடும் -வீட்டுக்கருகே யிருக்கும் பானை வேகும் சூளையோடும்-அந்தப்) பானைகளை விற்று வரத் தான் நடந்து செல்லும் ஊர்களோடும் முடிந்து விடுவதாகவே அவளுக்குத் தோன்றும். உடம்பு முடியாத தந்தை-உழைத்து உழைத்து உருமாறி விட்ட தாய் ஊர் சுற்றும் தம்பி இவர்களுக்கிடையே குடும்பப் பாசமெனும் கயிற்றினால் சுற்றி விடப்பட்ட பம்பரமாகச் சுழன்றாள் அந்தப் பளிங்குச் சிலை! பாவை - - கவலையெல்லாம் மறந்த அளவில் களிப்பு ஒருநாள் அவளை ஆட்கொள்ளும்-அதுதான் என்றைக்காவது அவள் தம்பி, பலமுறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஊதுகின்ற புல்லாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/9&oldid=1694870" இலிருந்து மீள்விக்கப்பட்டது