உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 39 மைனா, தன்னை சிங்காரத்திற்கு ஒப்படைத்துவிட்ட பூரிப்பில் மயங்கிக் கிடந்தாள் தன் வாழ்வில் மறுமலர்ச்சி தோன்றி விட்டதாக இன்பக் கனவு கண்டாள். சிங்காரத்தின் வாயிலிருந்து லேசாக வீசிக்கொண்டிருந்த மதுவாடை மாத்திரம் அவளுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. அதையும் அவனிடம் அவள் சொல்லி விட்டாள். “ குடிகாரன் என்று பயப்படாதே! பொழுது விடிந்தால் இந்தப் பேச்சு மறந்துவிடும் என்றும் சந்தேகப்படாதே! சாரா யத்தைவிட உன்னை நான் அதிகமாக நேசிக்கிறேன். எந்தக் குடிகாரனும் இது போலச் சொல்லமாட்டான் அதனால் என்னை நமபு! குடித்துப் பழகிவிட்ட என்னை இனிமேல் மாற்றவே முடியாது!" என்று மனந்திறந்து சிங்காரம் பேசி, அவளையும் ஒப்புக் கொள்ளச் செய்துவிட்டான். " ஏன் மை அர்ச்சுனதலில்தான் வேஷம் போட்டவனைப் பார்த்து - அர்ச்சுன ராஜன் என்று நினைத்து ஏமாந்துபோனாய் இப் போதும் என்னைத் தீச்சட்டி ஆட்டத்தில் பார்த்ததும் என்மீ து ஆசைகொண்டு விட்டாயே; இதிலும் ஏமாந்திருந்தால் என்ன செய்வாய்?” சிங்காரத்தின் இந்தக் குறும்புத்தனமான கேள்விக்கு மைனா தன் உதடுகளால் பதில் சொன்னாள். ஆனால் அந்தப் பதிலில் வார்த்தைகள் உதிரவில்லை. ஒலி மட்டுமே எழுந்தது. தீச்சட்டியின் ஜுவாலையிலேயே கிடந்து வெந்துகொண் டிருந்த சிங்காரத்துக்கு மகிழ்ச்சியூட்ட ஒரு குளிர்ந்த மாந்தோப்பு கிடைத்து விட்டது. மைனாவுக்கும் ஒரு ஆதரவு கிடைத்து விட்டது அவள் உள்ளத்தில் கப்பிக் கொண்டிருந்த அந்தகாரம் விலகி விட்டது. ஆனந்தத்தால் துள்ளியது நெஞ்சம் மறுநாள் காலையிலே சிங்காரம் சிற்றூருக்குப் புறப்பட வேண்டும். போய் இரண்டு நாளில் திரும்பி வந்து, மைனாவையும் அழைத்துக் கொண்டு சிற்றூரிலேயே குடித்தனத்தைத் துவங்க வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. பிரியா விடைபெற்று, சிங்காரம் விடியற்காலையில் அவளை விட்டுப் பிரிந்து கோயில் நிர்வாகி தனக்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டுக்குப் புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/41&oldid=1694925" இலிருந்து மீள்விக்கப்பட்டது