உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நீயும் இருக்கிறாய் 0 கலைஞர் என்பதை நினைத்துத்தான் நான் டையில் ஆறுதல் பெறுகிறேன். உனக்கும் எனக்கும் உள்ள தொலைவு அதிகமே தவிர, தொடர்பு தொடர்பு நெருக்க மானது. உன் தொண்டுள்ளத்துக்கும், அயராத கட்சிப் பணிக்கும் நான் தலை வணங்குகிறவன். உன் இதயத்தில் பதவி ஆசையின் துடிப்பு இல்லை. கரங்களில் தனிப்பட்டவர்க் கான பரிந்துரைச் சீட்டும் இல்லை. ஆகவே நீ என் வணக்கத் துக்கும், வாழ்த்துதலுக்கும் உரிய உடன் பிறப்பு! . நீ உன்னை, நான் வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; வறட்சிப் பணிகளை ஆற்றிடு என்று! பொங்கலைச் சிக்கன மாகக் கொண்டாடு என்று! அதற்காகப் பொங்கலே வேண்டாம் என்று கூறிடவில்லை. கொளுத்தும் வெயிலிலும், கொடிய மழை புயலிலும் தாய் தன் குழந்தையை அனைத்துக் கொண்டே ஓடுவது போல், தமிழகம் வறட்சியால் அல்லல்படும் இந்த ஆண்டில், தாய், தன் குழந்தையிடம் காட்டும் அன்பையும் ஆர்வத் தையும் போல நாமும், தமிழர் தம் உணர்வுத் திருநாளாம் இந்தப் பொங்கல் நாளின்பால் காட்டுவோம். கஷ்டம்தான் எனினும், குழந்தைக் கனியைத் தாய் எறிந்திடுதல் இல்லையே! தமிழகம் வறண்டு இருப்பினும். தமிழர் உணர் வெனும் செல்வத்தை வீசிடுதல் எங்கனம் இயலும்? இந்தப் பொங்கல் நாளில், என் இதயத்தின் சுமையை யும் உன்னிடம் ஓரளவு - ஆம்; கடுகளவு சுட்டிக் காட்டி யிருக்கிறேன்! வலி, குறையும் என்ற நம்பிக்கையுடன்! இதயச் சுமையினூடே இனிய பொங்கல் வாழ்த்துக்களை உனக்கு வழங்கி மகிழ்கிறேன். அன்புள்ள, (P. 5. 13 - 1 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_4.pdf/22&oldid=1695048" இலிருந்து மீள்விக்கப்பட்டது