உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை மாநாடு-1 "ஆண்டிகள் கூடுவோம்!" உடன்பிறப்பே, நீலத்திரைக் கடலோரத்தில் நித்தம் தவம்புரியும் குமரி எல்லையில் நீ தீட்டிய எழிலோவியத்தை எழுச்சி ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்து உன் ஆற்றல் மிகு கரங்களைப் பிடித்துக் கண்ணில் ஒத்திக்கொண்டு விடைபெற்றுப் புறப் பட்டேலைல்வா; அதற்குப் பிறகு நெல்லை மாவட்டத் திலும், மேற்கு ராமநாதபுரம் மாவட்டத்திலும் மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாகர் கோயில் மாநாட்டைத்தான் காண நேர்ந்தது. . - மலைத் தொடர்போல எதிர்ப்புகள் - அலை அலையாய்ச் சோதனைகள் - இத்தனைக்கும் ஈடுகொடுத்து நமது கழகம் வலிமையை வளர்பிறையாக்கிக்கொண்டு திகழ்கிறது என்ப தற்கான எடுத்துக்காட்டுக்களே, நமது மாநாடுகள், செயல்வீரர் கூட்டங்கள். சுற்றுப்பயண நிகழ்ச்சிகள். 0 இழிமொழி கூறி அழிக்கும் படலம். களங்கம் சுமத்திக் கவிழ்க்கும் படலம். 7 பழிகூறி மிரட்டும் படலம். 0 காட்டிக்கொடுத்து வீழ்த்தும் படலம். இத்தனையும் நமது வளர்ச்சிக்கு எதிராகக் கொடி தூக்கி ஆர்த்து எழுந்தன. இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. இனியும் ஓயும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. மேலும் கடுமை