உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 23 இருவரும் கொள்கைகளில் விடாப் பிடியினர்! காசம், புராணம், சாத்திரம், சம்பிரதாயம் அனைத் துக்கும் வைரியாக விளங்கியவர் ஈரோட்டுச் சிங்கம்! அவரை இடைவிடாது எதிர்த்து நின்றவர்-இதிகாச, புராணங்களுக்குப் புதிய ஓவியங்கள் தீட்டி மகிழ்ந்தவர் மூதறிஞர் ராஜாஜி! கொள்கைக் களத்தில் இருவரும் எதிர் எதிரே நின்றனர்! குன்றாத நட்புக் களத்திலோா அவர்கள் ஒருவரை யொருவர் தழுவிக் கிடந்தனர்! ராஜாஜியுடன் நெருங்கி நேரடியாகப் பழகக்கூடிய வாய்ப்பு, எனக்குப் பத்து பனிரெண்டு ஆண்டுக் காலந் தான்! அரசியல் ரீதியாக ஆரம்பமாகி, அன்புப் பிணைப் பாக அந்தப் பழக்கம் முகிழ்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது! 1962-ஆம் ஆண்டிலேயே கழகத்திற்கும்,ராஜாஜி அவர் களின் தலைமையை ஏற்றிருந்த சுதந்திரக் கட்சிக்கும் தேர்தல் உடன்பாடு தோன்றக்கூடிய நிலை ஏற்பட்டது என்றாலும், இறுதியில் அது நடைபெறாமல் போயிற்று! . ய 1967-ஆம் ஆண்டு ராஜாஜியும், அண்ணாவும், காயிதே மில்லத்தும் சிலம்புச் செல்வரும், ஒரே மேடையில் நின்று தேர்தல் பிரச்சாரத்திலீடுபடக்கூடிய அளவுக்கு தோழமை வளர்ந்தது. அண்ணா தலைமையில் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில நாட்களுக்கெல்லாம். பரிசுச் சீட்டு போன்ற திட்டங்களில் ராஜாஜி அவர்களுக்குச் ச சற்று மனக் கசப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு நிருபர்கள் கூட்டத்தில். அவர் சொன்னார்-தி. மு. க-வுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் தேன்நிலவு முடிந்துவிட்டது!" என்று! அதற்கு அண்ணா சொன்ன பதில் என்ன தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/33&oldid=1695257" இலிருந்து மீள்விக்கப்பட்டது