உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கலைஞர் நிதிக்கான தொகையை அளித்துவிட்டு நீ என்னைத் தழுவிக் கொண்டதும், என் கரங்களைப் பற்றிக்கொண் டதும், ஆனந்தக் கண்ணீர் பொழிந்ததும், முயல்குட்டிகள், புறாக்கள், பழங்கள், இன்னோரன்ன பரிசுகளைக் குவித்து நீ மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததும் என் நெஞ்சுக்கு எவ்வளவோ இதமாக இருந்தது. குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு. காதலர் இருவர் தாங்கள் ஒருவரை யொருவர் பிரியக் கூடாது- பிரிய மாட்டோம்-என்ற உறுதியினை வலுப்படுத்தும் பாடல் அது ! "யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. என் தாயும் உன் தாயும் பண்டுதொட்டு உறவின னரல்லா என் தந்தையும் உன் தந்தையும்கூட அவ்வாறே! எம்முறை யில் அவர்கள் எல்லாம் முன்பு உறவினர் என்பதுதெரியாது? யானும் நீயும்கூட முன்பு எவ்வகையில் ஒருவரையொருவர் அறிவோம் என்பதுகூடத் தெரியாது! என்றாலும், சிவப்பு நிலத்திலே பெய்த மழை அந்த நிலத்து நிறத்தோடே இரண்டறக் கலந்தது போல அன்புடைய நம் நெஞ்சங் கள் தாமாகக் கலந்து பிரிக்க முடியாத அளவுக்கு ஆகி விட்டன. என்பதே பாடலுக்கு விளக்கம். உடன்பிறப்பே, காதலர்க்கென எழுந்த கவிதை அதுவாயினும் அன்புடைய நெஞ்சங்கள் எப்படிக் கலந் துள்ளன என்பதற்குக் காட்டப்படும் உவமையே நம்மை பெரிதும் கவர்கிறது! அல்லவா? அவர்களாவது முன்பின் அதிகமாக அறியாதவர்கள்! அவர்களின் நெஞ்சமே அவ்வாறு ஒன்றிவிடுகிறது என்றால்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/68&oldid=1695293" இலிருந்து மீள்விக்கப்பட்டது