உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கலைஞர் அண்ணன் மறைந்த பிறகும் இந்த ஏழெட்டு ஆண்டு களில் கழகத்துக்கும், கழக அறக்கட்டளைகளுக்கும் சேர்க்கப்பட்டுள்ள பெருநிதிகளைத் திரட்டுவதற்கு நானும், நாவலரும், பேராசிரியரும், முன்னணித் தலைவர்களும் எத்தனை கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறோம் - அமைப் பினை நடத்துகிற கழகச் செயல் வீரர்களிடம் எவ்வளவு கண்டிப்புக்காட்டியிருக்கிறோம்! இவற்றையெல்லாம் நீ அறியமாட்டாய் என்று கற்பனை செய்து கொண்டுதான் களங்கம் கற்பித்துக் கலக மூட்டிடத் தவிக்கிறார்கள், செயற்குழுபற்றிய செய்திகளைத் திரித்து வெளியிடும் பத்திரிகையாளர்கள். தரமும், பண்பும் வாய்ந்தவர்களின் மேற்பார்வையில் நடைபெறுகிறது என்று நான் இன்னமும் நம்பிக்கொண்டி. ருக்கிற ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிகையிலேகூட நமது கழகச் செயற்குழுவைப் பற்றி இட்டுக் கட்டிய செய்தி கள். நாள்தோறும் வருவதைக் காணும்போது நான் உண்மையிலேயே வருந்துகிறேன். ரகசியக் கூட்டம் கருணாநிதி கவலை கருணாநிதிக்கு எதிர்ப்பு அணிகள் திரளுகின்றன. இப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டு, நமது செயற்குழுவுக்குத் தங்களை அறியாமலே விளம்பரங் களைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் நமது கழக ஏடுகள் 'எந்த கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழு கூட்டங்கள் பற்றிய யூகங்களை வெளி யிடுகிற பழக்கத்தை என்றைக்குமே கடைப்பிடித்தது கிடையாது.