உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் தொடங்கினர். சென்னை மாநகரிலிருந்தும் . 163 சென்னைக் கருகில் உள்ள பகுதிகளிலிருந்தும் நடந்து வந்தே நிதி வழங்கியவர்களும் உண்டு. வெளியூர்க்காரர்கள் புகைவண்டிகளில் வந்து தாங்கள் மேற்கொண்ட பயணத்தைக் கழகத்திற்கான கடமைப் பயணமாகக் கொண்டு நிதியை வழங்கியதும் உண்டு! தனிப் பேருந் துகளை ஏற்பாடு செய்துகொண்டு சென்னை வந்து சந்தித்து நிதி வழங்கியவர்களுமுண்டு! நான் கொடுத்திருக்கிற பட்டியல் அந்தப் பேருந்து களில் வந்த கழகக் கண்மணிகளின் ஊர்ப் பட்டியலும், ஒவ்வொரு ஊரிலும் இருந்து வந்த பேருந்துகளின் எண்ணிக்கைப் பட்டியலும்தான்! மே, ஜூன்; இந்த இரண்டு மாதங்களில் மட்டும் என் இல்லம் நாடிவந்த அன்பு உள்ளங்களை ஏற்றிவந்த தனிப் பேருந்துகளின் எண்ணிக்கை நூற்றி ஆறு! அதற்குப் பிறகு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், கோவை மாவட்டம் கூடக்கரை ஆகிய இடங்களிலிருந்து ஜூலை 5, ஜூலை 6, இரு நாட்களிலும் மூன்று பேருந்து கள்! மொத்தம் இதுவரையில் 109 பேருந்து வண்டிகளில் வந்து விசாரணைக் கமிஷன் செலவு நிதி அளித்துள்ளனர். . நான் அளித்துள்ள பட்டியலில் சில ஊர்களின் பெயர் கள் விடுபட்டிருக்கின்றன. வந்த பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நினைவில் இருப்பதைமட்டும் இப்போது குறிப்பிட்டிருக் கிறேன். விபரமான பட்டியல் பிறகு வெளியிடப் படும். பல ஊர்களில் பேருந்துகள் கிடைக்காத நிலை இருந்த போதிலும் இடையூறுகளை வென்று எப்படியும் கழகத்.